எங்கள் நம்பிக்கை தேவனிடத்தில் இருக்கிறது New York, New York, USA 51-0929 1உங்களுக்கு நன்றி, சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே. உங்களுக்கு மிகவும் நன்றி. மாலை வணக்கம் நண்பர்களே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், மிக தூரத்திலுள்ளவர்களை இரட்சிக்கவும் சுகமாக்கவுமான அவருடைய மகத்தான வல்லமையையும் பிரதிநிதித்துவப்படுத்தும்படியாக இந்த மாலை வேளையில் இங்கே மீண்டும் வெளியே இருப்பது சந்தோஷமாயிருக்கிறது. இன்றிரவு இந்த ஒலிப்பெருக்கி மிக நன்றாக இல்லை என்று சற்று முன்பு சகோதரர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர். மிகவும் பின்னால் வழியில் உள்ளவர்கள் நான் கூறுவதைக் கேட்க முடிகிறதா? மேலே உள்ளவர்கள்? கேட்க முடிகிறது... நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தக் கூடுமானால், அப்பொழுது என்னால் அதைக் கேட்க முடியும், அதை அறிந்து கொள்ள முடியும், பின்னால் வழியில் உள்ளவர்கள்... அது அருமை. அது அருமை. சரி. நான் மிகவும் உரத்த சத்தமாய் பேசிக் கொண்டிருக்கவில்லை, எனவே, நான்-நான் என்னையே கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது, குறிப்பாக இம்மாதிரியான நேரத்தில். இப்பொழுது, இன்றிரவு நான் கொஞ்சம் களைப்பாயிருக்கிறேன். இன்று காலையில் ஏறக்குறைய 3 மணி வரைக்கும் நான் மேலே இருந்தேன். நான்... கர்த்தர்... என்னுடைய மனதில் ஏதோவொன்று தோன்றியது, அவர்... அவர் தம்முடைய மகத்தான வல்லமையை அனுப்பி, அது என்னவென்று எனக்கு அதை வெளிப்படுத்துகிற வரையிலும் நான் விழித்திருந்தபடியே ஜெபித்தேன். அது இருக்கும் என்று அவர் சொன்ன விதமாகவே அது இருந்தது, அப்படியே இன்று அது திரும்பியது. நாம் அதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 2இப்பொழுது, இங்கே இந்த அரங்கத்தில் நாளை பிற்பகல் நான் பேச வேண்டுமா என்று அவர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர் என்று நினைக்கிறேன், எனவே நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான்-நான் ஆவலுடன் எதிர்பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறேன். உங்கள் எல்லாருக்காகவும் நான் தொடர்ந்து ஜெபிப்பேன். நமக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது, அதன்பிறகு நாங்கள் அநேக ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு போயாக வேண்டும். ஆனால் தேவனுடைய கிருபையினால் நாங்கள் பாதுகாப்பாக திரும்பி வருவோம் என்று நம்பிக்கையாயிருக்கிறேன், அப்போது இங்கே நியூயார்க்கிலுள்ள இம்மாதிரியான கூட்டத்தை ஏதோவொரு நாளில் கொண்டிருக்க கூடியதாக இருக்கும், அப்போது நான் இதைக் காண விரும்புகிறேன்: ... மட்டுமாக அப்படியே தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒருவர். அநேக நேரங்களில், ஜனங்கள் தாங்கள் ஆராதனையில் இருக்கும் போது, நான் சுற்றிலும் இருப்பதேயில்லை, அப்போது சாத்தான் அதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு விடுகிறான். பாருங்கள், மூன்று அல்லது நான்கு நாட்களாக நீங்கள் இருக்கிறீர்கள், உண்மையான காரியம் (வருவதற்கு) முன்பாக அதைக் காட்டிலும் அதிகமாக சிலசமயங்களில் அது இருந்து விடுகிறது, அந்த ஆசீர்வாதம் தனிப்பட்ட நபரிடம் சம்பவிக்கத் தொடங்குகிறது. அதன்பிறகு, சாத்தான் ஏறக்குறைய அந்நேரத்தில் திரும்பி வரும்போது, அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு வெளியே போகிறது, அதன்பிறகு அவன் மீண்டும் அம்மனிதனை சோதிக்க முயற்சி செய்கிறான், அநேக நேரங்களில் அவர்கள் வழி விட்டு விடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அது முடிந்து விடுகிறது. பாருங்கள், கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அவர்கள் திரும்பி வந்தார்கள், என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதை அவர்களால் காண முடிந்து, கூட்டத்தில் உண்மையாகவே அது ஒரு முடிவுக்கு வருவது மட்டுமாக தரித்திருக்க முடியும்; அப்போது நீங்கள் பத்தாயிரக்கணக்கான சுகமளித்தல்களைக் காண்கிறீர்கள், நான்—நான் அவ்வாறு விசுவாசிக்கிறேன், போதுமான காலம் நம்மால் அப்படியே தரித்திருக்கக் கூடுமானால். 3இப்பொழுது, விசுவாசம் கொண்டிருங்கள். நான் இதைக் கூறுகிறேன்: நான் போன பிற்பாடு, நீங்கள்-நீங்கள் அதைக் கண்டு கொள்வீர்கள், ஏற்கனவே கூட்டத்தில் சுகமடைந்த அநேக ஜனங்கள் இருக்கிறார்கள், அதாவது, ஒருக்கால் அவர்கள் இந்நேரத்தில் அதை உணருவதில்லை, ஆனால் அது உண்மை என்று நான்-நான் அறிவேன். இப்பொழுது, வேதவாக்கியத்தில் சிலவற்றை நான் வாசிக்க விரும்புகிறேன், என்னுடைய வார்த்தை மற்ற எந்த மனிதனுடைய வார்த்தையும் போன்றது தான்: அது தவறிப் போய் விடும்; ஆனால் தேவனுடைய வார்த்தையோ தவறிப் போகாது. நான் சற்று முன்பு என்னுடைய நல்நண்பரும் சகோதரருமாகிய சகோதரன் ரெய்மண்ட் T. ரிச்சி அவர்களைக் கவனித்தேன். (அவர் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டார் என்றும் அவர் போதித்து விட்டார் என்றும் நினைக்கிறேன்.) அவர் இங்கே இருந்தார்; சகோதரன் ரிச்சி அவர்களுக்காக நான் நிச்சயமாகவே உள்ளன்போடுள்ள கிறிஸ்தவ அன்பைக் கொண்டிருக்கிறேன். கர்த்தருடைய தூதனானவரின் படம் எடுக்கப்பட்ட அந்த இரவில் அவர் அந்த அரங்கத்தில் இருந்தார், இந்த ஊழியக்காரர் வெளியே வந்து நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று என்னை அழைக்க முயற்சித்த போது அந்த தர்க்கம் பண்ணின நேரத்தில் அவர் அங்கே தான் நின்று கொண்டிருந்தார். நான் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல என்று நான் அவரிடம் கூறினேன்; தெய்வீக சுகமளிப்பவன் என்கிற எந்த மனிதனும் கிடையாது. தேவனைத் தவிர சுகமளிக்கக் கூடிய எந்த மனிதனுமே கிடையாது. மருத்துவர்கள், அவர்கள் சுகமளிப்பதில்லை; அவர்கள் வெறுமனே இயற்கைக்கு உதவி செய்கிறார்கள். சுகமளிப்பதாக அவர்கள் உரிமை கோருவதில்லை. அவர்களால் ஒரு இடத்தை தைக்க முடியும், ஆனால் அவர்களால் அதைச் சுகப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு எலும்பைப் பொருத்தலாம், ஆனால் அவர்களால் அதைச் சுகப்படுத்த முடியாது. அதற்கு தேவன் அவசியம்; அவர் தான் சுகமளிப்பவர். அவர், 'உங்கள் சகல வியாதிகளையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே' என்று கூறியிருக்கிறார். எனவே எல்லா வியாதிகளும் தேவனாலே தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதாயிருக்கிறது. 4இப்பொழுது, நமக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, எலும்புகளைப் பொருத்தி, பற்களை பிடுங்கி, மேலும்-மேலும்-மேலும் மற்ற காரியங்களைச் செய்கிற மருத்துவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், ஆனால் அவர்கள் எல்லாம்-, எல்லாம் சரிதான். அதாவது, மருத்தவர்கள் ஜனங்களுக்காக தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் ஜனங்களுக்கு உதவி செய்கிறார்கள், மருத்துவமனைகளையும் நிறுவனங்களையும் நாம் கொண்டிருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், அவைகளுக்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது. நான் செய்கிற ஒரே காரியம் என்னவென்றால், தேவன் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஆசீர்வாதத்திற்கு உதவிகரமாயிருக்கிற எதற்காகவும் அல்லது ஜனங்களுக்கு உதவியாயிருக்கிற எதற்காகவும், நான் அதற்காகத்தான் இருக்கிறேன். ஜனங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிற எந்த அசைவோடும் தேவன் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதைத்தான் நாம் - நாம் எப்போதுமே செய்ய வேண்டும், வேறு யாருக்காகிலும் உதவி செய்யும்படி எதையாவது செய்ய முயற்சி செய்வது. அவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு, அதுதான் காரியங்களைக் குறித்துள்ள கிறிஸ்தவ மனப்பான்மையாக இருக்கிறது. 5இது ஒரு பெரிய அழுத்தும் பாரமாக இருக்கிறது, அதைக் குறித்து எவருக்குமே எதுவும் தெரியாது. அது அப்படியே தேவனும் நானும் மாத்திரமே. ஆனால் நான் படுக்கைக்குப் போகும் போது, நான் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, 'பிதாவே, இன்றைக்கு எவ்வாறு செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்த மிகச் சிறந்ததை செய்திருக்கிறேன். ஜனங்களுடைய ஜீவியத்தை கொஞ்சம் கூடுதலாக எவ்வாறு இனிமையாகச் செய்வது என்று நான் அறிந்துள்ள எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்' என்று கூறுவதென்பது என்னவொரு அற்புதமான சிலாக்கியமாயுள்ளது. அவருடைய ஆசீர்வாதங்கள் திரும்பி, திரும்ப வந்து, என்னுடைய ஜீவியத்தையும் சற்று கூடுதலாக ஆசீர்வாதமடையச் செய்கிறது என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நீங்கள் தேவனுக்காக எதையாகிலும் செய்ய விரும்பினால், அவருடைய ஜனங்களுக்கு எதையாகிலும் செய்யுங்கள். நீங்கள் உங்களைக் குறித்துக் கூறப்படும் நல்ல காரியம் எதையாவது விரும்புவீர்கள் என்றால், வேறு யாரைக் குறித்தாவது நல்ல காரியம் ஏதாவது கூறுங்கள். வேறு யாரையாவது ஆசீர்வதியுங்கள், நீங்கள் வேறு யாரையாகிலும் ஆசீர்வதிக்கையில், நீங்கள் தேவனையே ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இயேசு, 'இந்த என்னுடைய சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்று கூறியிருக்கிறார். எனவே, அது சத்தியம் என்பதை நாம் அறிவோம். எனவே, இப்பொழுது, இன்றிரவு நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கையில், கர்த்தராகிய இயேசு தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 6இப்பொழுது, நாம் ஒவ்வொருவரும் இங்கே வித்தியாசமான ஸ்தாபனங்களிலிருந்து பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறோம்: மெதோடிஸ்டு, பாப்டிஸ்ட், லூத்தரன், கத்தோலிக்கம், ஓ, கிறிஸ்தவ விஞ்ஞானம், மற்றும் அநேகமாக எல்லா வெவ்வேறு வகையான சபைகளில் உள்ளவர்கள், (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ஆனால் நீங்கள் சேர்ந்திருக்கும் சபை தேவனுக்கு அதிக முக்கியமானதல்ல. அது உங்கள் இருதயத்தின் நிலையாயுள்ளது: அதைத்தான் தேவன் நோக்கிப் பார்க்கிறார். அது ஸ்தாபன சபையல்ல; அவைகள் எல்லாம் சரிதான். அவைகள் அப்படியே மனிதர்களுக்கும் மற்றவைகளுக்கும் இடையே உள்ளதைப் போன்று ஒப்பந்தம் செய்கிறார்கள், நான் எந்த சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும்படிக்கு வரவில்லை. நான் அந்த சபையை (the Church) மாத்திரமே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன், நீங்கள் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்துகிற சபையை. அவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில், கிறிஸ்துவின் சரீரத்தில் மறுபடியும் பிறக்கிறார்கள். நான் 40 வருடங்களாக பிரன்ஹாம் குடும்பத்தில் இருந்து வருகிறேன்; அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்து கொள்ளும்படி அவர்கள் ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை. நான் பிரன்ஹாம் குடும்பத்தில் பிறந்தேன். அவ்வாறு தான் நீங்கள் தேவனுடைய குடும்பத்திலும் வருகிறீர்கள். அது சபையைச் சேர்ந்து கொள்வதன் மூலமல்ல; அதற்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது; அதெல்லாம் சரிதான்; நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் தேவனுடைய சபையில் பிறக்கிறீர்கள். அது உங்கள் பிறப்பு. நீங்கள் மீண்டுமாக மறுபடியும் பிறந்திருப்பதன் மூலமாக, தேவனுடைய பிள்ளையாக ஆகி, புதிய ஜீவனைப் பெற்று, கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாக ஆகியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் தேவனுடைய குமாரனும் குமாரத்தியுமாயிருக்கிறீர்கள். நீங்கள் எந்த ஸ்தாபன சபையைச் சேர்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. 7இப்பொழுது, 2 இராஜாக்களின் புத்தகம், 6ம் அதிகாரத்தில். நான் இந்த வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், நான்... நான் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதற்காக சகோதரன் பாக்ஸ்டர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். நான், 'சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, அதைச் செய்யாதீர்' என்று கூறினேன். நான் அப்படியே அந்தத் திரைச்சீலைக்குப் பின்பாக நின்று கொண்டு அவருடைய அற்புதமான செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சகோதரன் பாக்ஸ்டர் மிகப் பெரிய பேச்சாளர். நம்முடைய குழுவில் அவரைக் கொண்டிருந்து, நம்மில் ஒருவராக ஆக்கிக் கொள்வதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்கேயிருக்கிற சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் நான் எனது ஜீவியத்தில் எப்பொழுதும் கேட்டதிலேயே தெய்வீக சுகமளித்தலைக் குறித்து (பேசுகிற) மிகப் பெரிய போதகர்களில் ஒருவர் ஆவார், அவர் தான் சகோதரன் பாஸ்வர்த் அவர்கள். அவர் வயதானவர், அவர்... அவர்-அவர்... அவர் மாட்டார்... அவர் அதற்காக கோபப்பட்டு விடுவார். நான் ஒரு இரவில் மியாமியில் உள்ள பில்ட்மோர் ஓட்டலில் நின்று கொண்டிருந்தேன்; அவர் அப்படியே கம்பீரமாகவும், பலமுள்ளவராகவும், நேராகவும் நின்று கொண்டிருந்தார். நான் அவரை நோக்கிப் பார்த்து, அவரைப் பாராட்டினேன். ஜீவிய காலம் முழுவதும் அவர் யுத்தம் பண்ணியிருக்கிற யுத்தங்களை நான் அறிவேன், அவர் அந்த வனாந்தரத்தில் செதுக்கி உருவாக்கின பாதையை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நான், 'சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, உமக்கு இப்பொழுது 73 வயதாகிறது. நீர் எப்பொழுது உம்முடைய மிகச்சிறந்த நிலையில் இருந்தீர்?' என்றேன். அவர் பழங்கால காலேபைப் போன்று, தம்முடைய தோள்களைத் திருப்பி, 'சரியாக இப்பொழுதே' என்றார், 'சரியாக இப்பொழுதே நான் மிக நன்றாக இருக்கிறேன்' என்றார். அவர், 'சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர், நான் ஒரு பழைய வீட்டில் உள்ள ஒரு சிறு பிள்ளையாக இருக்கிறேன்' என்றார். எனவே அந்தவிதமாகத்தான் அவர் அதைக் குறித்து உணருகிறார், தேவன் அவரை அவ்விதமாகத்தான் வைத்திருக்கிறார், அது அற்புதமாயுள்ளது. 8ஓ, நான்... இயேசு தாமதிப்பாரானால், நானும் அவ்வளவு நீண்ட காலம் இருக்க முடியும், நான் அவ்விதமாக இருக்கட்டும். அது உண்மை. இங்கேயிருக்கும் சகோதரன் ரிச்சி அவர்கள், நான் அவரைக் குறித்து எவ்வளவாக பேச முடியும், நான் எப்படியாக பள்ளியில் படிக்கும் ஒரு சிறு பையனாக இருக்கும் போதே, எவ்வாறு காலங்களினூடாக அவர் அங்கே வெளியே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நான் வெறுமனே ஒரு சிறு பையனாக இருந்த போதே வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் தெய்வீக சுகமளித்தலின் பேரிலான சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்ததை உங்கள் தாய்மார்களும் தகப்பன்மார்களும் கேட்டார்கள், இல்லினாய்ஸிலுள்ள சீயோனை சேர்ந்த அவர்கள் இருவருமே. அந்த நபர்கள் அல்லது மகத்தான போதகராகிய காலஞ்சென்ற டாக்டர் டாவி (Doctor Dowie) அவர்களின் கீழிருந்து வந்தவர்கள். டாக்டர் டாவி அவர்கள் மரித்து 40 வருடங்களில் நான் அந்தப் பட்டணத்திற்கு வருவேன் என்று அவருடைய மரணத்தில் எப்படியாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. அதைக் குறித்து எதுவுமே தெரியாது, அவர் ஒருநாள் மரித்துப் போனார், நான் அடுத்ததாகப் பிறந்தேன். நாற்பது வருடங்களில் அந்த நாள் தான், நான் அதைக் குறித்து எதுவும் அறியாமலேயே நான் அந்தப் பட்டணத்திற்குள் பிரவேசித்தேன். ஓ, எப்படியாக தேவனுடைய மகத்தான அசைவு ஒன்றாக இணைகிறது. பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன். 9இப்பொழுது 6வது அதிகாரம், 8வது வசனத்தைக் கூர்ந்து கவனிப்போம். என்னுடைய வார்த்தையை ஆசீர்வதிப்பதாக தேவன் ஒருக்காலும் வாக்குப்பண்ணவில்லை, ஆனால் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பதாகத் தான் அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். மேலும் இப்பொழுது, எலியாவின் ஆவி இரட்டிப்பாக கிடைக்கப்பெற்ற இந்த மகத்தான மனிதனாகிய எலிசாவின் நாளுக்கு நிகரான நாளை நாம் கொண்டிருக்கையில், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். பூமியில் ஒரே சமயத்தில் எந்த இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் எந்த காலத்திலும் ஒருபோதும் இருக்கவில்லை. அங்கே அனேக சிறிய தீர்க்கதரிசிகள் இருந்தனர், ஆனால் ஒரு பெரிய தீர்க்கதரிசி தான் அங்கே இருந்தான். எலிசா வரும் வரை எலியா தீர்க்கதரிசியாக இருந்தான். பிறகு எலியா எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒரு பங்கு, எலியாவின் ஆவியின் இரண்டு பங்கு... எலியாவின் ஆவி எலிசாவின் மேல் வந்தது. பாருங்கள், எப்பொழுதும் இதை நினைவில் வையுங்கள், தேவன் தம்முடைய மனிதனை பூமியை விட்டு எடுத்துக்கொள்கிறார், ஆனால் தம்முடைய ஆவியை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை; அவருடைய ஆவியானது சரியாக இந்த வழியில் திரும்பி வருகிறது: அது எலியாவின் மேல் வருகிறது; எலியாவை விட்டு சென்று எலிசாவின் மேல் (வருகிறது); அது எலிசாவை விட்டு, யோவான்ஸ்நானகனிடமும், யோவான் ஸ்நானகனை விட்டு, இந்தக் கடைசி நாட்களில் மீண்டும் வரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதே ஆவி. பாருங்கள்? அது தேவனுடைய ஆவி. 10பரிசுத்த ஆவியானவர் பெந்தெகோஸ்தேயில் சபையின் மேல் இருந்தார், சரியாக அந்த காலத்தினூடாக வந்து, சரியாக லூத்தரன், பாப்டிஸ்ட், மெதொடிஸ்ட் காலங்களினூடாக, இங்கே இந்த காலத்திற்குள் வருகிறார். அது இன்னும் அதே பரிசுத்த ஆவி தான். ஜனங்களுடைய விசுவாசம் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒரு நிலைக்கு எழும்பும் போது, அது அவர்களுடையது என்று உணரும்படியான நிலைக்குள் எழும்பும் போது, அங்கே முன்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்தது போலவே அப்படியே அதே விதமான பரிசுத்த ஆவியின் நடைமுறைகள் சபையிலும் இயங்கிக் கொண்டிருக்கும். இப்பொழுது, இதைக் கூர்ந்து கவனியுங்கள்: (2 இராஜா. 6:8—12) அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனை பண்ணினான். ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் இராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்து சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். 11நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். பரலோகப் பிதாவே, தீர்க்கதரிசி எலிசாவின் மேலிருந்த மகத்தான தேவனுடைய ஆவியானவர் இன்று இன்னுமாக பூமியில் தேவ குமாரர்கள் வழியாக அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். பெந்தெகோஸ்தேவில் அருளப்பட்ட அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார். உமது பிள்ளைகள் அநேகர் சோர்வுற்றவர்களாகவும், களைப்படைந்தவர்களாகவும், சுற்றிலும் நெருக்கித் தள்ளப்பட்டவர்களாகவும், இருக்கிறார்கள், எல்லாருமே தங்களுடைய சொந்த நன்மையாயிருக்கிற தங்கள் போதனைகளுக்காகவும், அவர்கள் கர்த்தருக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும்படியாக சிறு பிள்ளைகளுக்கான பயிற்சியைக் கொண்டிருக்கிறார்கள். சோதனைகள் வெள்ளியைப் பார்க்கிலும், பொன்னைப் பார்க்கிலும் அதிக மதிப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன, ஆனால் எழுதப்பட்டுள்ளபடி, 'எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணப்படாது'. ஆனால் முடிவாக, உமது சபையானது அதனுடைய பயிற்சியை பெற்றிருக்கும் போது, அவர்கள் புத்திரசுவிகார குமாரர்களாகவோ அல்லது ஸ்தானத்தில் பொருத்தப்பட்ட குமாரர்களாகவோ ஆகி தேவனுடைய சுதந்தரவாளிகளாக சகலத்தையும் சுதந்தரித்து, தேவ குமாரர்களாகவும், அவருடைய சகோதரர்களாகவும் வல்லமைகள் மற்றும் ஆசீர்வாதங்களில் சமமானவர்களாக ஆகி விடுவார்கள். 12அவர் இந்த உலகத்தில் எப்படியாக தேவ குமாரனாகப் பிறந்தார் என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். ஆனால் 30 வயதில், தேவன் அவரை ஸ்தானத்தில் பொருத்தினார். அந்நாளில் யோர்தான் நதிக்கரையில், அவருடைய தலைமயிரிலிருந்து தண்ணீர் துளித்துளிகளாக விழ, அவர் நின்று கொண்டு, தேவன் தம்முடைய குமாரனாக அதை (அவரை) நிரூபித்து, 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று கூறினார். புத்திர சுவிகாரம், ஸ்தானத்தில் பொருத்துதல், அவர் முடிக்க வேண்டியிருந்த வேலைக்காக அவருடைய இராஜ்யத்திற்குள் பொருத்தப்படுதல். அவர் பிரயாணத்தை முடித்து விட்டார் என்பதற்காக நாங்கள் இன்றிரவு எவ்வளவாக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அதன்பிறகு அவமானத்தை வெறுத்து, ஆனால் அதை சகித்து, எங்களுக்குப் பதிலாக கல்வாரியில் ஆணியடிக்கப்பட்டு, மரண தண்டனையில் மரித்தார்; ஒரு தொழுவத்தில் பிறந்து, மரண தண்டனைக்குள் கடந்து சென்றார். மகிமையின் இராஜா இறங்கி வந்து, மனுஷர்கள் மத்தியில் கூடாரமிட்டார், அந்த தந்த அரண்மனையிலிருந்து தம்மைத்தாமே விட்டு விட்டு, தூதர்களின் ரூபமாயில்லாமல், ஆனால் ஒரு அடிமையின் ரூபமானார். அவர் தாழ்மையான வஸ்திரம் தரித்து, சுற்றித் திரிந்தார், அவருடைய தலை சாய்க்கவும் இடமில்லை, அவரால் எங்கு உறங்க முடியுமோ அவ்வாறு எங்கேயாகிலும் உறங்கினார், அவர் நேசித்தவர்களே அவரை வெறுத்தார்கள், பிறகு கடைசியாக இரத்தம் தோய்ந்த பலியாக ஆனார். ஆனால் அவர் பிதாவை அவ்வளவாய் பிரீதிப்படுத்தினதால், அவர், 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்' என்றார். 13பிறகு பொந்தியு பிலாத்துவின் கீழாக உபத்திரவப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்து, பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து, இப்பொழுது திரித்துவத்தில் மூன்றாவது நபராகிய பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொண்டிருக்கிற எங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இன்றிரவு அவர் எங்களுடைய இருதயங்களில் இருந்து ஆளுகை செய்து, அரசாட்சி செய்கிறார். அவர், 'நீங்கள் விரும்புகிற காரியங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஜெபிக்கும் போது, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்' என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, இந்தக் கடைசி நேரத்தில் மிகவும் பெரிய இருண்ட மணி நேரங்கள் வருகின்றன. இப்பொழுது இன்றிரவு இந்த ஆராதனையில் எங்களுக்கு உதவி செய்யும், தேவனுடைய மகத்தான ஆவியானவர் தாமே மனிதர்கள் மத்தியில் காணக்கூடிய விதமாக இறங்கி வந்து, இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரும் அவர் தங்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வார்களாக. ஓ, தேவனே, களிமண்ணை எடுத்து, சாவுக்குரியவர்களின் சத்தத்தை எடுத்து, பேசும், கர்த்தாவே, தேவனுடைய செய்தியை ஜனங்கள் கண்டு, தேவனுக்கு பயந்து, அவரை சேவிப்பார்களாக. இன்றிரவு இங்கேயிருக்கும் எல்லா வியாதியஸ்தர்களும், உபத்திரவப்படுகிறவர்களும், ஒவ்வொருவரும் சுகமாவார்களாக, அங்கே பலவீனமான ஒருவரும் மீதியாக இருக்க வேண்டாம். கர்த்தாவே, இதை அருளும், ஞாபகச் சின்னமான ஒரு இரவாக இந்த இரவு இருப்பதாக. இந்த செயின்ட் நிக்கோலாஸ் அரங்கத்தை நினைவுகூருபவர்கள் எப்பொழுதுமே இன்றிரவை நினைவுகூருவார்களாக. இப்பொழுது எங்களை ஒருமிக்க ஆசீர்வதியும், உம்முடைய நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 14இந்த வேதவாக்கியத்தை சிறிது நேரம் நோக்கிப் பார்ப்பது எவ்வளவு அற்புதமாயுள்ளது, ஏனெனில் நேரம் கடந்து விட்டது, சுமார் பன்னிரண்டு, பதினைந்து நிமிடங்கள். நான் கடந்த இரவு, பின்லாந்தில் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்ட சிறுவனைக் குறித்த அத்தரிசனத்தை உங்களிடம் சொல்லி முடிக்க விரும்பினேன். நான் அதைக் குறித்து அந்த அரங்கில் (auditorium) பேசுவதை நீங்கள் கேட்டு, அது சம்பவிப்பதற்கு முன்பே அதை தங்களுடைய வேதாகமத்தில் எழுதி வைத்திருந்தவர்கள் எத்தனை பேர் இங்கேயிருக்கிறீர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள்? நான் சென்ற இரவு கேட்டேன். பின்லாந்தில் மரணத்தினின்று உயிரோடு எழுப்பப்பட்ட சிறுவனைக் குறித்து. அப்படிப்பட்டவர்களாகிய உங்கள் கரங்கள் உயர்த்தப்படுவதை நாங்கள் காணட்டும்... கட்டிடம் முழுவதும், எங்கும், அதைப் பாருங்கள். பாருங்கள், அது சம்பவிப்பதற்கு முன்பு, நீண்ட கால இடைவெளி இருந்தது. எப்பொழுதும் அவ்விதமாகத்தான் பேசப்படுகிறது, மேலும் அது... உங்களால் அப்படியே அதை எழுதி வைக்க முடியும், அது பரிபூரணமாயுள்ளது. அதைப் பேசுவது மனிதனல்ல; அது தேவனாகும். இது ஜனங்களுக்கு தேவனுடைய சத்தமாக உள்ளது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதையாயிருக்கிறது, அது நல்ல நிலத்தில் விழுமானால், வேதத்தில் உரைக்கப்பட்டது போன்றே அப்படியே மிகச்சரியாக அதை பிறப்பிக்கும். இப்பொழுது அது தேவனுடைய சபைக்கு தேவனுடைய சத்தமாக உள்ளது. இப்பொழுது, ஒரு தனிப்பட்ட நபரிடம், அவர் சில சமயங்களில் ஒரு மனித சத்தத்தை பயன்படுத்துகிறார், அது இரண்டாம் பட்சமாகும். அதை இந்த எழுதப்பட்ட வார்த்தையுடன் ஒப்பிட்டுக் பார்க்க வேண்டும். இப்பொழுது இதைச் செய்து கொண்டிருப்பதில், தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 15அந்த தீர்க்கதரிசியாகிய எலிசா எப்படியாக... சீரியாவின் இராஜா இஸ்ரவேலுடன் யுத்தத்தை கூறுவித்தான், அவர்களுக்கிடையே பகைமை இருந்தது, ஏன், தீர்க்கதரிசியாகிய எலிசா தன்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தான். சத்துரு என்ன செய்யப் போகிறான் என்பதை அவன் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலின் ராஜாவிடம் சென்று சீரியாவின் ராஜா பதுங்கியிருக்கும் இடத்தை அவனிடம் கூறி, வெளியே அவர்களிடம் வந்து, அவர்கள் வரும்போது அவர்களை பதுங்கி நின்று தாக்கும்படிக்கும் அவனிடம் கூறினான். இஸ்ரவேலின் ராஜா அங்கு (மனுஷரை) அனுப்பி தீர்க்கதரிசியாகிய எலிசா தன்னிடம் கூறியிருந்தபடியே இருக்கக் கண்டான். தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு தெய்வீக மண்டலத்தின் (Divine realm) வழியாக உதவி செய்ய வல்லமையுடையவராய் இருந்தது போல, அமெரிக்க ஜனங்களாகிய நாம் மீண்டும் தேவனிடம் திரும்பினால், தேவன் அமெரிக்க ஜனங்களாகிய நமக்கும் உதவி செய்வார். தேவனால் இன்றிரவும் தெய்வீக மண்டலத்தின் வழியாக இந்த எல்லாவற்றிலுமிருந்தும் அமெரிக்காவுக்கு உதவி செய்ய முடியும். நாம் தேவனிடத்தில் வைத்திருக்கும் நம்முடைய ஒரே நம்பிக்கை அதுதான். இன்றிரவு நம்முடைய நம்பிக்கையானது அணுகுண்டில் அல்ல. இன்றிரவு நம்முடைய நம்பிக்கையானது இயேசு கிறிஸ்துவில் உள்ளது. கிறிஸ்துவே பதிலாக இருக்கிறார். 16டோக்கியோவில் அந்த மதகுரு, இன்னும் சரியாக கூறினால் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் அவர் நின்று கொண்டிருந்தார். யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, நண்பரான சமயகுரு அங்கே நின்று கொண்டிருந்து, அவர் தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, 'தேவனே, (ஒரு சித்தரவதை கூடத்தில்) நான் இவ்விடத்தினின்று உம்மை சந்திக்க வீட்டிற்கு வருவேன் என்று நான் யூகிக்கிறேன். நான் இன்னும் ஒருமுறை என் மனைவியையும் குழந்தைகளையும் சந்திக்க விரும்புகிறேன், ஆனால் அப்படியிருந்தும் கர்த்தாவே, நான் இங்கிருந்து வீட்டிற்கு செல்ல நீர் விரும்பினால், நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்' என்றார். அந்த சிறு வாலிப போர்வீரன் படைவீரர்கள் இருக்கும் தன்னுடைய இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருப்பதை கவனித்தார், அந்த போர்வீரன் நடந்து அவரை அணுகினான், அவன் பேச விரும்புவது போல காணப்பட்டது. அவன் வலது பக்கமும் இடப்பக்கமும் யாராவது (இருக்கிறார்களா) என்று பார்க்கும்படி என்று நோக்கினான்... அவன், 'நீங்கள் கிறிஸ்தவரா?' என்று கேட்டான். சமயகுரு, 'ஆம்' என்றார். அவனோ, 'நானும் கூட கிறிஸ்தவன் தான்' என்றான். அங்கு தான் பதில் உள்ளது. நான்கு பெரிய வல்லமை வாய்ந்த நேச நாடுகளோ, அவைகளின் தலைவர்களோ (Big Four), ஐக்கிய நாட்டு சபையோ (U.N) அல்ல, ஆனால் கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட வழியில் தான் பதில் உள்ளது. மேலே பின்லாந்தில், ரஷ்யர்களும் பின்லாந்துக்காரர்களும் தங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் சுற்றிலும் போட்டுக்கொண்டு ஒருவர் மற்றவரை கட்டி அணைத்துக்கொண்டு, தங்கள் கன்னங்களில் கண்ணீர் வழிய ஒருவர் மற்றவரை முத்தமிட்டதை நீங்கள் கண்டிருப்பீர்கள், சகோதரர்களே. அவர்களிடையே எந்த விரோதமும் இல்லாதிருந்தது. இக்காலத்தின் தேவன் தான் (சாத்தான் - தமிழாக்கியோன்) தலைவர்களின் இருதயங்களை தன்வசப்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கிறான். இச்சமயத்தில் உலகத்தின் இராஜ்ஜியங்கள் அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமாயுள்ளன. நீங்கள் அதை விசுவாசிக்க விரும்பவில்லை, ஆனால் அது வேதப்பூர்வமானது. 17சாத்தான் இயேசுவை மேலே கொண்டு சென்று, உலகத்தின் சகல இராஜ்ஜியங்களையும் அவருக்குக் காண்பித்து, 'இவைகள் என்னுடையவைகளாயுள்ளன. இவைகளுக்கு நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்' என்றான். இயேசு அதை அறிந்திருந்தார், ஆனால் அவர் அவைகளுக்கு சொந்தக்காரராய் ஆவார் என்பதையும் அறிந்திருந்தார். சாத்தான், 'நீர் கீழே விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், நான் இவைகளை உமக்குக் கொடுப்பேன்' என்றான். இயேசு, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே' என்றார். வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில், 'பரலோகங்களே, பரிசுத்த தீர்க்கதரிசிகளே களிகூருங்கள், இந்த உலகத்தின் ராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்ஜியங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்ஜியபாரம் பண்ணி ஆளுகை செய்வார்' என்று எழுதப்பட்டுள்ளது; அதற்குப் பிறகு எந்த யுத்தமும் இருக்காது. எல்லா இடங்களிலும் உள்ள தலைவர்களும் சுயநலம் கொண்டவர்கள் தான். ஆனால் இந்த எல்லாவற்றினிடையிலும், பரிசுத்த ஆவியால் தேவனுடைய சபையானது வெளியே இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 18அந்த ராஜா எங்கே பதுங்கியிருக்கப்போகிறான் என்பதை எலிசா கண்டு, அவன் இஸ்ரவேலின் ராஜாவிடம் (ஆள்) அனுப்பி, 'இப்பொழுது, நீர் அவ்வழியில் போக வேண்டாம். ஏனெனில் அவர்கள் அங்கே இருந்து (பதுங்கியிருந்து) காத்துக்கொண்டிருக்கின்றனர்' என்று கூறினான். அந்த அதே தீர்க்கதரிசியை கவனியுங்கள், தோத்தானில் வந்தபிறகு, அவன் அதைக் காணவில்லை... சீரியர் வந்து பட்டணத்தை சூழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைக் குறித்து கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குக் காண்பிக்கவில்லை, தேவன் அதற்காக வேறொரு வழியை வைத்திருந்தார். தேவன் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு எல்லாவற்றையும் காட்டுவதில்லை. ஆனால் அறிவின் வார்த்தையானது (Word of knowledge) அவர்கள் அறிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவாக அதை அவர் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டுகிறார். எனவே அது தேவனுடைய வல்லமையில் வைக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள், மனிதனுடைய வல்லமையிலல்ல. மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த போதிலும், ஆனால் இன்னுமாக, தேவன் தான் பிதாவாகவும் யாவர் மேலும் ஆளுகை செய்கிறவராகவும் இருக்கிறார். பழங்காலத்து பிலேயாம், 'தேவன் தன்னுடைய வாயில் வைக்கிறதை மட்டுமே அல்லாமல் (வேறு எதையும்) எந்தத் தீர்க்கதரிசியுமே கூற முடியாது. தேவன் பேசாவிட்டால், அவனால் எப்படி பேச முடியும்' என்றான். அது சத்தியமாக இருந்தது. 19இப்பொழுது, நாம் பழங்காலத்து தீர்க்கதரிசிகளைக் குறித்து வாசிக்கிறோம், தேவனுடைய வல்லமையைக் குறித்தும், அது எவ்விதம் சபையை நடத்தினது என்பதை குறித்தும் வாசிக்கிறோம். இன்றிரவு, இங்கேயிருக்கும் வெதுவெதுப்பான நண்பனே, கிறிஸ்துவுக்குள் நீ இருக்க வேண்டிய ஸ்தானத்தில் இல்லாமல் இருப்பவனே, மகத்தானதும் மகிமையானதுமான தேவனுடைய வல்லமையானது மீண்டுமாக அவருடைய சபையில் ஆளுகை செய்து, அரசாட்சி செய்கிறது. பின்னாலிருக்கும் ஒருவனாக நீங்கள் இருக்க வேண்டாம். உலகத்தோடு பிரபலமாயிருக்க முயற்சிக்க வேண்டாம், தேவனோடு சரியாக இருங்கள், ஏனெனில் உங்களால் முடியாது. நீங்கள் கட்டாயம் தேவனோடு சரியாக இருக்க வேண்டும், அப்போது நீங்கள் உலகத்தோடு பிரபலமாயிருக்க மாட்டீர்கள். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில், உங்கள் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுங்கள். நீங்கள் மனந்திரும்பும் ஒரு தருணத்தை கொண்டிருக்கும் நேரத்திலும், தேவனுடைய இரக்கமானது கீழே வந்தடையும் நேரத்திலுமாகிய அழைக்க வேண்டிய இந்நேரத்தில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள், கூப்பிடுவதால் எந்த நன்மையும் இல்லாத வேளையானது வருகிறது. அப்பொழுது, அது மிகவும் காலதாமதமாகியிருக்கும். இப்பொழுதே கூப்பிடுங்கள். அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த, கடந்து போன அந்த நாட்களில் நீங்கள் ஜீவித்திருப்பீர்களானால், நீங்கள் இன்றைக்கு, 'நான் அவருக்காக நின்றிருப்பேன். நான் அவருக்காக என்னுடைய ஜீவனையே கொடுத்திருப்பேன்' என்று கூறுகிறீர்கள். நீங்கள் அப்போது அந்த நாட்களில் ஜீவித்திருப்பீர்களானால், அதைச் செய்வதற்கு உங்களுக்குக் கிடைத்திருக்கும் தருணத்தை விட அதிக தருணம் இப்பொழுது உங்களுக்கு உண்டு. இப்பொழுதே நில்லுங்கள், அப்போது இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு எதிர்ப்பு அதிகமாய் உள்ளது. 20கடந்த மாலை வேளையில், அந்த சிறு, சந்தோஷ செய்தி கூடாரத்தில் (Glad Tidings Tabernacle) நான் பேசிக்கொண்டிருந்தேன், அங்கே தான் எங்களுக்கு ஆராதனை இருந்தது, ஏனென்றால் இங்கே சென்ற மாலையில் இந்த மண்டபம் (hall) உபயோகத்தில் இருந்தது. பின்லாந்தில் அந்த சிறுவனை மரணத்தினின்று எவ்வாறு கர்த்தர் உயிரோடெழுப்பினார் என்பதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன், அது சம்பவிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அதை ஒரு தரிசனத்தில் கண்டேன். இப்பொழுது, அதை செய்தது எது? உங்கள் சகோதரன் அல்ல, ஆனால் தேவனுடைய ஆவியானவர் தான் அதைச் செய்தார். எலியாவின் மேலிருந்த, கடந்து போன மனுஷர்களின் மேலிருந்த அதே ஆவி தான் இது; இன்று உலகத்தில் அதே ஆவி தான் அசைவாடிக் கொண்டிருக்கிறது. அது காண்கிறது, முன்னுரைக்கிறது; நீங்கள் அதைக் கவனியுங்கள். இன்றிரவு கூட்டத்திலும் அது இருந்து அதே காரியம் செய்யப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அது நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேலும் இருந்தது. ஒரு மனிதன் அவரிடம் வந்து, அவரைச் சந்தேகிக்கப் போன போது, இயேசு கூறினார், அவர் நாத்தான்வேல் வருவதைக் கண்டபோது, 'ஓ, இதோ, ஒரு கபடற்ற உத்தம இஸ்ரவேலன்' என்றார், வேறு வார்த்தைகளில் (சொன்னால்) ஒரு கிறிஸ்தவன், ஒரு விசுவாசி. அவன், 'நீர் என்னை எப்போது அறிவீர்?' என்றான். அவர், 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்' என்றார். 21இப்பொழுது, அது மனதிலுள்ளதை வாசிப்பது என்றோ அல்லது-அல்லது மனதுடன் தொடர்பு கொள்ளல் (Mental telepathy) என்றோ பிலிப்பு அதைக் குறித்துப் பேச முயற்சிக்கவில்லை, அவன் அப்படியே, 'நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் ராஜா' என்றான். அவனுடைய தீர்மானத்தினிமித்தமாக அவனுடைய பெயரானது இன்றும் மனிதர்கள் மத்தியில் அழியாமல் நிலைத்திருக்கிறது. தேவனுடைய குமாரனும், இஸ்ரவேலின் ராஜாவுமாகிய இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் உங்கள் தீர்மானத்தை செய்யும்போது, உங்கள் நாமமானது என்றென்றும் அழிவில்லாமல் நிலைத்திருக்கும். பிறகு அவர் கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம் அவளுடைய பாவங்களைக் குறித்து கூறினபோது. அவர் சிறிது நேரம் அவளிடம் பேசி, 'போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அது தான் அது; அதுதான் அவளுடையது, அதுதான் அவளுக்குத் தடங்கலாக இருந்தது. ஏன், ஒரு சமயம் அவர் பெரும் ஜனக்கூட்டத்தை விட்டு விட்டு, ஏதோ ஒரு வகையான வியாதியைக் கொண்டிருந்த ஒரு மனிதனை கண்டு, சுகமாக்கினதைக் குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது: பரிசுத்த யோவான் 5. அவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அவர், 'மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறெதையும் தாமாய்ச் செய்ய குமாரனால் முடியாது: குமாரனும் அந்தப்படியே செய்கிறார்' என்றார். பரிசுத்த யோவான் 5:19. 'பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்: நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் காண்பிப்பார்,' 20-வது வசனம். 22இப்பொழுது, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. அவர் ஒரு சுகமளிப்பவர் என்று உரிமை கோரவில்லை. அவர், 'கிரியைகளை செய்வது நானல்ல; என் பிதா எனக்குள் வாசம்பண்ணி அந்த கிரியைகளை செய்கிறார்' என்றார். அவர் தாம் ஒரு மகத்தான மனிதராக இருப்பதாக உரிமை கோரவில்லை, ஆனால் அவர் எவ்வாறு இருப்பதாகத் உரிமை கோரினாரோ, அவ்வாறு தான் அவர் இருந்தார்; தேவன் அவரை நிரூபித்தார், அவர் எவ்வாறு இருப்பதாக உரிமை கோரினாரோ அவ்வாறு அவர் இருந்தார். சத்தியத்தைப் பேசும் ஒவ்வொரு மனிதனையும் தேவன் நிரூபிப்பார் (vindicate) மனிதன் எதையும் கூறலாம், அது அதை அவ்வண்ணமாக ஆக்கி விடாது. ஆனால் தேவன் பேசும் போது, அது அதை அவ்வண்ணமாக ஆக்குகிறது. பிதா அவருக்கு காண்பித்ததையே அப்படியே அவர் செய்ததாக அவர் கூறினார். வேதவாக்கியம், 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்று கூறுகிறது, மூன்று... எபிரெயர் 13:8. அப்படியானால் இயேசு கிறிஸ்து நேற்றிருந்தது போல இன்றும் அவர் மாறாமல் இருப்பாரானால், இன்னும் அவர் நேற்று செய்த அதே கிரியைகளை இன்றும் செய்கிறார். அவர் அவ்வாறு செய்யவில்லையென்றால், அவர் இயேசு கிறிஸ்துவல்ல, அவர் அவ்வாறு உரிமை கோருவதில்லை. 23அவர் இந்த கிரியைகளை எவ்விதம் செய்கிறார்? ஒரு காணக்கூடிய சரீரத்திலா? இல்லை. 'இன்னும் கொஞ்சகாலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்: உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன், உங்களுக்குள் இருப்பேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; இவைகளைப் பார்க்கிலும் பெரிய (அல்லது அதிகமான) கிரியைகளையும் செய்வீர்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. இரவு கூட்டத்தில் அவர் அதிகமானவைகளைச் செய்கிறார், ஒரே ஒரு கூட்டத்தில், என்ன செய்ய வேண்டும் என்று ஜனங்களிடம் கூறினவைகளிலும் மற்றவைகளிலும் அதிகமானவைகளைச் செய்கிறார், புதிய ஏற்பாட்டில், மூன்று வருட ஊழியத்தில், ஜனங்களிடம் அவர் கூறியிருப்பவைகளைக் குறித்து எழுதப்பட்டுள்ளவைகளைக் காட்டிலும் அதிகமானவைகளை ஒரேயொரு கூட்டத்தில் செய்கிறார் (அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்). நிச்சயமாகவே அவர் செய்த அநேக காரியங்கள் உண்டு, லூக்கா சுவிசேஷத்தின்படி அவைகள் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் எழுதப்பட்டுள்ள அக்காரியங்கள். ஒரு சமயம் தன்னுடைய வாயில் ஒரு பணத்தைக் (a coin) கொண்டிருக்கும் ஒரு மீன் அங்கே இருந்ததாக அவர் ஒரு மனிதனிடம் கூறினார். அவர்கள் ஒன்றாக கூடி வருகிற இரண்டு இடங்களில் கட்டப்பட்டிருந்த சில கழுதைகள் எங்கேயிருக்கும் என்பதை அவர்களிடம் கூறினார். தண்ணீர்குடம் சுமந்து கொண்டு வருகிற ஒரு மனிதன் எங்கிருப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார், ஒரு மேலறையை ஆயத்தம் செய்திருந்தார். அவர் சொல்லியதாக பதிவு செய்து எழுதப்பட்டுள்ள சுமார் ஆறு ஏழு காரியங்கள், எல்லாமே அவர்... ஆனால் அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்திருந்தார்; அவர் அவர்களுடைய மனதை புரிந்துகொண்டார். 24இயேசு ஜனங்களின் மனதிலுள்ளவைகளை புரிந்து கொண்டார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் அவர்களின் சிந்தனைகளை அறிந்துகொண்டார். அது சரியா? அப்போது அவர்கள் எதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார். இன்றிரவு நீங்கள் எதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் அறிவார். அவர் இப்பொழுது இங்கே இருந்து கொண்டு, நீங்கள் எதைக்குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் அறிகிறார். நீங்கள் எதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் தம்முடைய வாய்க்கால்களின் (channels) வழியாக வெளிப்படுத்த முடியும். பிசாசு நிச்சயமாகவே தேவன் கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் குறித்த முறைகளையும் (pattern) மாதிரிகளையும் வைத்திருக்கிறான் என்பதை நாம் அறிவோம். சாத்தான் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இரண்டாந்தரமானதாகும், அவன் தேவனுடைய மாதிரிகளிலிருந்து எடுத்து வைத்திருக்கிறான் (patterned off). ஒவ்வொரு போலியான காரியமும் அசலாக உண்டாக்கப்பட்ட ஏதோவொன்றைக் கொண்டிருக்கிறது. உண்மையான அசலான டாலர் நோட்டு முதலில் இல்லாமல் போலி டாலர் நோட்டு இருக்காது. அங்கே போலியான ஒன்று எவ்வளவு காலம் இருந்தாலும், அது எங்கோ உண்மையான ஒன்று உள்ளது என்பதை மாத்திரம் நிரூபிக்கிறது. ஆமென். உண்மையான ஒன்று, எனவே பிசாசு செய்து கொண்டிருக்கும் ஏதோவொன்றை நீங்கள் காணும்போது, தேவன் அதற்கும் மிகுந்த அளவில் மேலான ஏதோவொன்றைப் பெற்றிருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், அவன் இங்கே ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இயேசு, 'அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்' என்றார். 25சரி. இப்பொழுது அவருடைய ஆவி இங்கே உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தம்முடைய சபையில் அசைவாடிக் கொண்டிருக்கிறார். சபையே, அதனுடன் உள்ள காரியம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இங்கே அதுதான் உள்ளது. நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விட்டுக்கொடுப்பதில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, 'நல்லது, இவ்வளவு தான் நான் போக வேண்டியது' என்று எண்ணுகிறீர்கள். நல்லது, நீங்கள் அப்போது தேவனுக்காக அலுவலில் ஈடுபட, போக ஆயத்தமாகிறீர்கள். நீங்கள்... இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்று, -பரிசுத்த ஆவியைப் பெறும்போது தான், அப்போது தேவனுக்காக ஊழியம் செய்ய (work) போகும் ஒரு நபராக (candidate) இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் போய் உங்கள் அங்கத்தினர்களை அவரிடம் விட்டுக் கொடுப்பீர்களானால் (yielding), அவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் பிரசங்கிக்கவோ, பாடவோ, சாட்சி கூறவோ, துண்டுப்பிரதிகளை கொடுக்கவோ, ஜனங்களுடன் பேசவோ, யாரோ ஒருவரை சபைக்கு அழைத்து வரவோ செய்ய வேண்டும். எல்லா வகையான வரங்களும், கிறிஸ்துவின் சரீரத்தில் உபயோகிக்கப்படுகின்றன. சிலர் ஒரு காரியத்திற்காகவும், சிலர் வேறொரு காரியத்திற்காகவும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் பெற்றிருப்பது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஒரு பொருட்டல்ல... நீங்கள், 'நல்லது, சகோ. பிரான்ஹாமே, என்னால் செய்ய முடிந்த ஒரே காரியம் என்னவென்றால், சில ஜனங்களிடம் பேச மாத்திரம் முடியும்' என்று கூறலாம். நல்லது, அது உங்களுக்கு மிகவும் அதிகமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை இயேசுவின் கரங்களில் கொடுத்து, அவர் அதைக் கொண்டு என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள். சிறிய பையன்களின் கரங்களிலிருந்த சிறிய மீன்களைப் போல, அது அவனுக்கு மாத்திரம் போஷிக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அவன் அதை இயேசுவின் கரத்தில் கொடுத்த போது, அது ஐயாயிரம் பேரை போஷித்தது. எனவே அது உங்களுடன் இருக்கும். நீங்கள் கொண்டிருப்பதை அவருடைய கரத்தில் கொடுங்கள். 26நான் சென்ற இரவு உங்களிடம் கூறினபடி, பின்லாந்தில் அவ்விரவு அந்த சிறுவன் மரணத்திலிருந்து உயிர்பெற்று எழுந்த போது; அந்தச் சிறு பெண் பிள்ளை. மற்ற பையன் தன்னுடைய தலையில் அடிபட்டவனாய், பலமாக மோதி அடிக்கப்பட்டு வேறொரு இடத்தில் (கிடந்தான்). அவர்கள் மருத்துவனையிலிருந்து எங்களை அழைத்தனர்; அந்த சிறுவன் மரித்துக்கொண்டிந்தான். அந்தச் சிறு பரிதாபமான பின்லாந்து நாட்டு தாய்; நான் இல்லவே இல்லாமல் ஆகி விட்டேன், அவளுக்காக நான் மிகவும் வருந்தினேன். அங்கே ஆயிரமாயிரக் கணக்கானோர் இருந்தனர். அந்த அரங்கத்திற்கு அருகிலும் உங்களால் போக முடியாது, இரண்டு அல்லது மூன்று நகர வட்டாரங்கள், எவ்விடத்திலும் அவர்கள் நெருக்கமாக இருந்தனர், அது லாப்லாந்திற்கு அருகிலுள்ள பின்லாந்திலுள்ள கோபியோவில். ஓ, நாங்கள் கிறிஸ்துவில் என்ன ஒரு அற்புதமான மகிமையான நேரத்தை கொண்டிருந்தோம். ஒரு நாள் இரவு நான் சென்ற போது, அவர்கள் என்னை அந்த சிறு தாயாரிடம் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள், திருமதி ஐசக்ஸன், 'சகோதரன் பிரான்ஹாமே, அந்தச் சிறு பரிதாபமான தகப்பனாரும் தாயாரும்' என்றாள், இரண்டாம் நாள், 'அவர்கள் இங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காண பரிதாபமாய் உள்ளது. அவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; நீர் அங்கே போக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்' என்றாள். நான், 'சகோதரி ஐசக்ஸன், என்னால் எதுவும் செய்ய முடியாது. தேவன் முதலில் எனக்குக் காண்பிக்க வேண்டும். நான் அந்த பிள்ளைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்' என்றேன். 'நீங்கள் சற்று வெளியே வந்து அவர்களிடம் பேசுவீர்களா?' என்றாள். எனவே அவர்கள் அந்த கூடத்திற்கு (hall) அவர்களை அழைத்துக்கொண்டு வந்தனர். சிறு பரிதாபமான தாய், அவள் ஓடி வந்து, 'ஓ, சென்று, என் குழந்தையை சுகப்படுத்துங்கள்' என்று கூறினாள். நிச்சயமாகவே மொழிபெயர்ப்பாளர் மூலமாக; அவள் ஆங்கிலத்தில் பேசவில்லை. நான், 'சகோதரியே, என்னால் உன்னுடைய பிள்ளையை சுகப்படுத்த முடியாது' என்றேன். 'நல்லது, மற்றொரு சிறிய பையன் மரித்து விட்டபிறகு அவர்கள் அவனை எழுப்பினர், உம்மால் என் சிறுபிள்ளையை சுகப்படுத்த முடியும்; அவன் மரித்துக்கொண்டிருக்கிறான்' என்றாள். நான், 'இல்லை, பெருமாட்டியே (ma'am), நான் என்னுடைய தாய்நாடான அமெரிக்காவில் இருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்னால் அந்தப் பையன் எங்கே விழுந்து கிடப்பான் என்றும், அவனுடைய தோற்றம் எவ்வாறிருக்கும் என்றும், அச்சிறுவன் எவ்விதம் இருப்பான் என்றும் சொல்லி அந்த தரிசனத்தை தேவன் காண்பித்தார்' என்றேன். உங்களில் அனேகர் அதை சுகமளித்தலின் சத்தம் பத்திரிகையில் வாசித்திருப்பீர்கள், இல்லையா? அது சுகமளித்தலின் சத்தம் பத்திரிகையில் இருக்கும் என்று நான் உங்களிடம் கூறுகிறேன், அது - அதுதான். 27பிறகு, அச்சிறு ஏழை தாய்க்காக, நான் அவளுக்காக மிகவும் வருந்தினேன். அவள் சொன்னாள்... நான், 'அது ஒரு தரிசனம்' என்றேன். அவளோ, 'நல்லது, நீர் போய் என் சிறு மகனுக்காக தரிசனத்தைக் காண வேண்டும்' என்றாள். நல்லது, அது இனிமையானதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பும் நேரத்திலோ, உங்களுடைய ஓய்வு நேரத்திலோ தரிசனங்களை உங்களால் காண முடியாது. அது தேவனுடைய தெய்வீக ஒழுங்கு, நான் விரும்புவதல்ல, ஆனால் அவர் விரும்புவது. இப்பொழுது, பிறகு இப்படித்தான் அது சம்பவித்தது. நான், 'நீங்கள் கிறிஸ்தவர்களா?' என்றேன். 'இல்லை.' நான், 'கவனியுங்கள், மருத்துவர் சொன்னபடி, உங்களுடைய சிறு மகன் ஒருக்கால் மரித்துக்கொண்டிருக்கலாம். அவன் (மரித்தால்) மேலே பரலோகத்திற்கு செல்வான், ஏனென்றால் அவன் ஒரு சிறு பையனாயிருக்கிறான்' என்றேன், ஏறக்குறைய ஆறு, ஏழு வயதிருக்கும். நான், 'அவனுக்கு-அவனுக்கு இன்னும் பாவமென்றால் என்னவென்றே தெரியாது, அவன் மேலே பரலோகத்திற்குச் செல்வான். நீ உன்னுடைய பாவங்களில் மரிப்பாயானால், நீ ஒருபோதும் இனி அவனுடன் இருக்க முடியாது. நீ இரட்சிக்கப்பட்டு, சிறு பையனும் மரித்து பரலோகத்திற்குச் செல்வான் என்றால், நீ, நீயும் மரிக்கும் போது, மேலே பரலோகத்திற்கு செல்வாய்; நீ அவனுடன் எப்போதும் இருப்பாய், அது விபத்துக்கள் இல்லாத இடம். ஒருவேளை, என்னிடமிருந்து அனுகூலத்தை நீ விரும்பினால், எனக்காக நீ ஏதோவொன்றை செய்யவேண்டும், அன்பான ஏதோவொன்று. நீ தேவனிடம் ஒரு அனுகூலத்தை விரும்பினால், அன்பான (kind) ஏதோவொன்றை செய்' என்றேன். எனவே அவர்களால் அதைத் தவற விட்டு விட முடியாது என்பதை அவள் கண்டு கொண்டாள், எனவே அவர்கள் முழங்கால்படியிட்டு, அழத்தொடங்கி, ஜெபித்து, தங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்கு கொடுத்தனர். அவர்கள் எழுந்தனர்; பிறகு அந்தச் சிறிய ஏழை தாயானவள், 'இப்பொழுது, நீர் உள்ளே போய், என் சிறு மகனுக்காக தரிசனம் காண வேண்டும்' என்றாள். நான், 'நான் போய் ஜெபிக்கிறேன்' என்றேன். அவள், 'மருத்துவமனைக்கு போகும்படி வர வேண்டும்' என்றாள். நான், 'இல்லை, அவர் அங்கே எனக்குக் காண்பிக்கும் அதே விதமாகவே, அப்படியே என் அறையிலும் அவரால் எனக்குக் காண்பிக்க முடியும். அவர் ஒருக்கால் எனக்கு காண்பிக்காமலும் இருக்கலாம்' என்றேன். எனவே இறுதியாக திருமதி.ஐசக்ஸன் அவர்களைப் போகச் செய்தாள். அவர்கள், 'சகோதரன் பிரான்ஹாம் இப்பொழுது தரிசனம் கண்டாரா?' என்று சில நிமிடங்களுக்கொருமுறை திரும்ப திரும்ப தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் தங்களுடைய சிறு பையனின் (சுகமாக்குதலில் - தமிழாக்கியோன்) ஆர்வமாயிருந்தனர். ஏனெனில் சுகமடையப்போவதில்லை என்று மருத்துவர் கூறியிருந்தார், இது மூன்றாம் நாள். 28நாங்கள் அவ்விரவு அந்த அரங்கத்திலிருந்து அப்போது தான் வந்திருந்தோம். ஓ, நான் இந்த இதே வேதாகமத்தை மார்பில் அணைத்தவாறு ஜன்னலருகில் நின்று கொண்டிருந்தேன்; நான் ஜன்னல் பக்கமாகச் சென்றேன்; வருடத்தின் அந்த சமயத்தில் அங்கே அது இருளாயிருக்கவில்லை. அங்கே பின்லாந்து இராணுவவீரர்களும், இராணுவத்தை சார்ந்திராத அதிகாரிகளும் (civilians) ஒருவர் மற்றவருடன் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியும், ஒருவேளை கூட்டத்தைக்குறித்து பேசியிருக்கலாம், ஏனென்றால் அவர்கள் அனைவரும் அந்த அரங்கத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அங்கேயுள்ள முழு தேசத்தாரும் ஜனங்களோடு வேலை செய்து கொண்டே ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்தனர். நான் ஒரு மேசை மேல் என் வேதாகமத்தை வைத்தேன். என் சகோதரனாகிய ஹவார்டு வந்திருந்தார். அவர் சென்ற முறை இங்கே நம்மோடு இருந்தார் என்பது உங்களில் அனேகருக்கு நினைவிருக்கும். இப்பொழுது இங்கே கனடாவை சேர்ந்த ஜனங்கள் யாராவது இருப்பார்களாயின், உங்கள் தேசத்தை எந்தவிதத்திலும் குற்றப்படுத்த இதைக் கூற வேண்டும் என்று கருதவில்லை. பாருங்கள்? நாங்கள் கனடாவில் இருந்தபோது கொஞ்சம் இனிப்பு ஆகாரத்தைப் (candy) பெற்றோம், ஓ, என்னே, அது, அதில் வைக்கும்படியாக அமெரிக்க ஜனங்களிடமுள்ள காரியம் அவர்களிடம் கிடையாது. இப்பொழுது, அது... அது ஒருவகையான சுமாரான ருசியை உடையதாயிருந்தது (flat tasting). அவர், 'கனடாவிலுள்ள இனிப்பு ஆகாரம் (candy) சுமாரான (சுவையுடன்) இருப்பதைக் குறித்து நீர் பேசுகிறீரே, இதை சுவைத்துப் பாரும்' என்றார். அவர் எனக்கு இரண்டு சிறு இனிப்புத் துண்டுகளைக் கொடுத்தார். நான் அதை அப்படியே மேசை மேல் வைத்து விட்டு, அங்கே நடந்து சென்றேன். நான் இதைப்போன்று என் கரங்களை மேலே உயர்த்தி, 'ஓ, மகத்தான யேகோவா, நீர் எவ்வளவு அற்புதமானவர், ஆச்சரியமானவர் (wonderful)' என்றேன். அவர் அவ்விரவு, யுத்தத்தில் அனாதையான அந்தச் சிறுமியை சுகமாக்கினார், நீங்கள் அறிவீர்கள், அவள் ஊனமுற்றவளாயிருந்தாள், நான் சென்ற இரவு உங்களிடம் கூறினபடி, அவளுடைய ஒரு கால் மற்ற காலை விடவும், சுமார் ஆறு அங்குலங்கள் குட்டையாயிருந்தது. அவளுடைய படத்தை நீங்கள், சுகமளித்தலின் சத்தம் பத்திரிகையில் கண்டிருக்கிறீர்கள், எப்படி அவளால் அவர்களோடு போக முடியவில்லை, அவள் போரில் அனாதையான சிறுமி. அவளைச் சுகமாக்கினதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தேன். 29மேலும் அங்கே நின்றுகொண்டிருந்த போது, வினோதமான ஏதோவொன்றை உணர்ந்தேன்; நான் நோக்கிப் பார்த்த போது, இதோ அங்கே அவர் என்னுடைய பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு அழகான மலர் குவளையை (vase) தன்னுடைய கரத்தில் வைத்திருந்தார். நான் அதை ஒரு மலர் குவளை (vase) என்று அழைக்கிறேன். எனக்கு அதிகம் தெரியாது; அது ஒருவகையான நீண்ட உயரமான காரியமாக இருந்தது. மேலும் அதனுள்ளே இரண்டு அமெரிக்க மலர்கள் இருந்தன, நான் ஈஸ்டர் மலர்கள் என்று அழைக்கிறதும், இள மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கிற பூக்களுமாக அவை இருந்தன. நான்... நாங்கள் இந்தியானாவிலும் கென்டக்கியிலும் அவைகளை ஈஸ்டர் மலர்கள் என்று தான் அழைக்கிறோம்; நான்... ஒருக்கால் இங்கே வித்தியாசமான பெயராக இருக்கலாம், ஆனால் அவைகள் ஒருவகையாக காண்பதற்கு மஞ்சள் நிற மலர்களாகும், அவைகள் ஏறக்குறைய ஈஸ்டரின் போது பூக்கின்றன. அவர் வைத்திருந்த இந்தச் சிறு குவளையில் அவைகள் (மலர்கள்) இருந்தன, இந்தச் சிறு காரியத்தில் அவைகள் இருந்தன. அவர் அதை இதோ மேசையின் மேல் வைத்தார். அந்தச் சிறு ஈஸ்டர் மலர்களில் ஒன்று வடக்கு நோக்கி சாய்ந்திருந்தது, அது முழுவதுமாக கீழ் நோக்கிய விதமாக கிடந்தது, மற்றொன்று வாடி வதங்கிக் கிடந்தது. 30அவர் என்னை நோக்கிப் பார்த்தார், அவர் உயரமான பெரிய மனிதராய், சுமார் 200 பவுண்டுகள் எடையுள்ளவராய் கருமையான தலை மயிர் தம்முடைய தோள்களில் கொண்டவராய், ஒருவிதமான பொன் பழுப்பு நிற முகத்தோற்றம் (Olive complexion) கொண்டவராய் இருந்தார், அவர் எப்போதுமே தம்முடைய கரங்களை மடக்கினவராய் எப்பொழுதும் வலது பக்கத்திலிருந்து என்னிடம் வருகிறார். நான் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாய் இருந்தது முதற்கொண்டே அவர் வருகிறார். கென்டக்கியில் உள்ள ஒரு சிறு மரக்கொட்டிலில் (log cabin) அவர் முதலாவதாக எனக்கு தோன்றின போது எனக்கு வெறுமனே ஒரு சில நிமிடங்கள் தான் வயதாகியிருந்து. அவர் அங்கே நின்று கொண்டிருந்தார்; அவர் அந்த... இந்தச் சிறு காரியத்தை அங்கே கீழே வைத்துவிட்டு, என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அதைப் பார்த்தேன், அவர், 'உன்னுடைய சகோதரன் உன்னிடம் என்ன கொடுத்தான்?' என்றார். நான், 'ஐயா, இரண்டு இனிப்புத் துண்டுகள்' என்றேன். அவர், 'அவைகளை சாப்பிடு' என்றார். நான் அந்த இனிப்புத் துண்டுகளில் ஒன்றை எடுத்து, புசிக்கத் தொடங்கினேன், அது இனிப்பான நல்ல சுவையாக இருந்தது, நான் அதை விழுங்கி விட்டேன். நான் அவ்வாறு செய்த போது, வடக்கு நோக்கி சாய்ந்திருந்த அந்த ஈஸ்டர் மலரானது அப்படியே மிகச்சரியாக பூகோளரீதியாக முதல் பையனை கார் இடித்த போது அவன் விழுந்த இடமாகிய வடக்கு நோக்கி சாய்ந்தது, மற்ற பையன் தெற்கு நோக்கி சென்று, முகவாய்க்கட்டையின் கீழாக அவனுக்கு அடிபட்டு, அவன் ஒரு மரத்தின் மேல் மோதினான். மற்ற பையனின் மேல் கார் ஏறி, அவன் காருக்கு கீழாக கூழாக்கப்பட்டு மரித்துப் போனான். அவன் உயிரடைந்து, பிறகு பள்ளிக்குத் திரும்பினான்; இந்தச் சிறுவனோ இன்னும் மருத்துவமனையிலேயே இருந்தான், நாங்கள் அவனிடம் போகவில்லை. 31எனவே, அந்தவொன்று அவ்விதமாகவே கிடந்தது, நான் முதலாவது துண்டை சாப்பிட்டபோது, அது 'வியூ!'வென்று சரியாக நேராக மேலே எழுந்தது. அவர், 'இரண்டாவது துண்டை புசி' என்றார். நான் அந்த துண்டை எடுத்து (புசித்தேன்), ஓ, என்ன ஒரு மோசமான சுவை. (சகோதரன் பிரன்ஹாம் துப்புவது போன்ற சத்தத்தை ஏற்படுத்துகிறார் - ஆசிரியர்) நான் இதைப் போன்று அதை வெளியே துப்பிவிட்டேன், அந்த மலரானது, 'டஃப், டஃப், டஃப்' என்று போகத் துவங்கி கீழ் நோக்கிப் போனது. 'தோல்வி, அந்தப் பையன் மரித்து விடுவான்' என்றார். நான் அதைத் திரும்பவும் என் வாயில் வைத்து, மிக வேகமாக மென்று அதை விழுங்கி விட்டேன். நான் அதைச் செய்தபோது 'டஃப்' என்று போய் மற்றதுடன் சரியாக நிமிர்ந்து நேராக நின்றது. அவர் என்னை நோக்கிப் பார்த்தார், நீங்கள் படத்தில் காண்கிற அந்த ஒளிவட்டம் கீழிறங்கி அவர் இருந்த இடத்தில் வந்தது; அவர் மேலே அந்த ஒளியினுள் சென்று போய்விட்டார். 32சகோதரன் பாக்ஸ்டரும் என்னுடைய சகோதரன் ஹாவர்டும் தங்களுடைய அறைக்குள் சென்றிருந்தனர். சகோதரன் லின்ட்சேயும் சகோ.மூரும் தங்களுடைய அறைக்குள் சென்றிருந்தனர், சகோதரி ஐசக்ஸன் தன்னுடைய அறைக்கும், நான் என் அறைக்கும் போயிருந்தேன். நான் வெளியே ஓடி வந்து, (அவர்களைக்) கூப்பிட்டு, நான், 'இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நினைவில் கொள்ளுங்கள், அந்தப் பிள்ளை, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருக்கும் பிள்ளை பிழைக்கப் போகிறான். அவளைக் கூப்பிட்டு அவளிடம் சொல்லுங்கள்' என்றேன். எனவே அப்போது, அங்கே அவர்களிடம் இருக்கிற தொலைபேசிகள், அது ஒரு சின்னஞ்சிறிய காரியமாக இருக்கிறது, அதை ஒரு விதமாக உங்கள் காதில் வைத்து, ஒரு சிறு வளைவான அச்சை (crank) சுழற்ற வேண்டும். அவள் அந்த வீட்டை அழைத்தாள், திருமதி ஐசக்ஸன் அதை செய்தாள்; ஜனங்கள் மருத்துமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர், பிள்ளை அமிழ்ந்து கொண்டும் மரித்துக்கொண்டும் இருந்தான். அவர்களுடைய மற்ற பிள்ளைகளுடன் (இருக்கும்படி), பெற்றோர் வெளியில் செல்லும்போது பிள்ளையை கவனித்துக்கொள்ளும் ஒருவரை (babysitter) அவர்கள் வைத்திருந்தனர். பிள்ளையின் முடிவைக் காண அவர்கள் சென்றனர். அவர்கள்-அவர்கள் மருத்துவமனைக்கு போனில் கூப்பிட்ட போது, மருத்துவர் வந்து அந்த ஸ்திரீயை தொலைபேசியின் அருகில் அழைத்துச் சென்று, கர்த்தருடைய தூதன் இப்பொழுது தான் அறையில் தோன்றி, 'உன் பிள்ளை பிழைக்கப் போகிறான்' என்று கூறியுள்ளார் என்றார். 'அது எனக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும். அதோ அவன் இப்பொழுதே குணமடைந்தவனாக உட்கார்ந்து கொண்டு, சரீரத்தைக் கழுவி, வீட்டிற்குப் போக ஆயத்தமாகி விட்டான்' என்றாள். அந்தப் பையன் இன்றும் பரிபூரணமாகவும், இயல்பாகவும், சுகமாகவும் பின்லாந்தில் ஜீவிக்கிறான், ஏனெனில் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஒரு தாயின் ஜெபத்தைக் கனம் பண்ணினார். பாருங்கள்? நானல்ல. அது அந்த தாயாரின் ஜெபமாகும், அவளும், (பிள்ளையின்) தகப்பனாரும் தேவனை சேவிப்பதாக அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தனர். 33சற்று பொறுங்கள், நான் ஜெப வரிசையைத் துவங்கப் போகிறேன். கடந்த மாலையில், நாங்கள் வீட்டை அடைந்த போது, எங்களுக்கு மிகவும் துயரமான செய்தி கிடைத்தது. என்னுடைய மனைவி இங்கே குழந்தையோடு எனக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். எங்களுக்கு ஏறக்குறைய 6 மாத சிறு குழந்தை ஒன்று வீட்டில் இருக்கிறது, அந்த சிறு குழந்தையை விட்டு வருவதென்பது எவ்வளவு கடினமான காரியம் என்று உங்களுக்குத் தெரியாது. விளங்கிக் கொள்ள முடியாத சிறிய தலை அவளுக்கு இருந்தது; அன்றொரு நாள், அவள் அதை என்மேல் இந்தவிதமாக வைத்தாள், அப்போது என்னுடைய இருதயத்தின் உட்புறம் முழுவதும் என்னை விட்டு வெளியே போனது போல உணர்ந்தேன். நான் அவளை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். கடந்த இரவில் யாரோ ஒருவரிடமிருந்து, அந்தச் செயலாளரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்தது, 'குழந்தை வியாதியாயிருக்கிறது' என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. நிச்சயமாகவே, அந்த தாய் எப்படி உணர்ந்திருப்பாள் என்பது உங்களுக்குத் தெரியும்; அவள் அப்படியே ஏறக்குறைய பய உணர்ச்சி பெருக்கோடு பயந்து கொண்டிருந்தாள். குழந்தையானது ஒரு போனில் பேசும் தூரத்திலிருந்து மிக தூரத்தில் வசித்து வந்த பாட்டியோடு தங்கியிருந்தது. நான், 'நல்லது, இது கிட்டத்தட்ட நடுஇரவு நேரமாக உள்ளது; இன்றிரவு தொலைபேசியில் அழைக்க வேண்டாம், காலையில் அழைக்கலாம்' என்றேன். 34நாங்கள் அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே படுத்திருந்தோம்; என்னால் தூங்கச் செல்ல முடியவில்லை. என்னுடைய மனைவியின் மூச்சு சத்தம் மெதுவாக ஆகி வர, பின்பு இயல்பாகவே ஆகி விட்டதை நான் கேட்டேன். எனவே நான் மேலே நழுவி வேறொரு அறைக்குள் சென்று, முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினேன். ஏறக்குறைய இன்று காலை 3 மணியளவில், நான் அந்த அறைக்குள் நோக்கிப் பார்த்தேன், அப்போது யாரோ ஒருவர் என்னிடம் வந்து என்னுடைய குழந்தையை என்னிடம் தருவதை நான் கண்டேன். அது மூச்சு திணறிக் கொண்டிருந்தது, அதனுடைய சிறிய முகம் சிவந்து போயிருந்தது; அவனுடைய சிறிய கண்கள் கடினமடைந்து இருந்தது. அவன் மூச்சு திணறிக் கொண்டிருந்தான்; அவனால் தன்னுடைய மூச்சைப் பிடித்துக் கொள்ள முடியவில்லை, ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் இருந்தனர். அவர்கள் அதை என்னிடம் கொடுத்தனர், நான் அதை என்னுடைய கரங்களில் வைத்துக் கொண்டு, 'ஓ, தேவனே, என்னுடைய குழந்தை சாகும்படி விட்டு விடாதேயும்; அதற்கு ஜீவனைக் கொடும். அப்படி செய்வீரா, கர்த்தாவே?' என்றேன். ஏறக்குறைய அந்த நேரத்தில், அது தன்னுடைய மூச்சை பிடிக்கும் சத்தத்தைக் கேட்டேன், அது என்னை நோக்கிப் பார்த்தது, அப்போதே அது சுகமாகி இருந்தது. நான் அதைத் திரும்பக் கொடுத்தேன், கர்த்தருடைய தூதனானவர் அறைக்குள்ளிருந்து பேசி, 'குழந்தை வியாதிப்பட்டிருந்த செய்தி காலையில் உனக்குக் கிடைக்கும், ஆனால் அது இப்பொழுதோ சரியாகி விட்டது' என்று கூறினார். நான் அப்படியே சற்று நேரம் காத்திருந்து விட்டு, பின்பு உறங்கி விட்டேன். இன்று காலை ஏறக்குறைய 9 மணிக்கு விழித்தேன்; மனைவி அறைக்குள் வந்து, அவள், 'நான் தொலைபேசியில் அழைக்கப் போகிறேன்... நான் இப்பொழுதே தொலைபேசியில் அழைத்து குழந்தையைக் குறித்து அறியப்போகிறேன்' என்றாள். நான், 'தேனே, நீ அழைக்க வேண்டியிருக்காது. ஆனால் இந்தப் பெண் அதைக் குறித்து காண்பதற்காக போகும் போது, இதோ உனக்கு இந்தச் செய்தி கிடைக்கப் போகிறது. அந்தப் பெண், 'குழந்தை மிக மோசமாக வியாதிப்பட்டிருந்தது, ஆனால் அது இப்பொழுது சுகமாகி விட்டது. நேற்றிரவு தேவன் அதைச் சுகமாக்கினார்' என்று கூறப் போகிறாள்' என்று கூறினேன். 35எனவே அவள் தொலைப்பேசியில் அழைத்தாள்; என்னுடைய சிறு பையன் பில்லி பாலும் அவர்கள் எல்லாருமே தொலைபேசியைச் சுற்றிலும் கூடி விட்டனர், நான், 'இந்த வார்த்தைகளை வார்த்தைக்கு வார்த்தை கவனியுங்கள்' என்றேன். எனவே இவள் அழைக்க அந்தப் பெண் தொலைபேசியை எடுத்தாள், இவள், 'நீ அந்த வயல் நிலத்தைக் கடந்து சென்று, குழந்தையைக் குறித்து பாட்டியிடம் கேள்(விசாரி)' என்று கூறினாள். அவள், 'குழந்தை மிக மோசமாக வியாதிப்பட்டிருந்தது, ஆனால் இன்று காலையில் அதெல்லாம் சரியாகி விட்டது' என்று கூறினாள். அப்படியே வார்த்தைக்கு வார்த்தை. ஓ, நண்பனே, அதை வெளிப்படையாகக் கூற அதிக மணி நேரங்கள் பிடிக்கும்; என்னால் அதைச் செய்ய முடியவில்லை; அவர் செய்கிற காரியங்கள் அது எல்லையற்றது. அது என்ன? அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அங்கே முற்காலத்திலிருந்த எலியாவோடு இருந்தவர், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்தவர், இன்றிரவு சபையிலும் இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்தின் இரகசியத்தையும் அறிந்து, அது அப்படியே என்னவாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 36பரலோகப் பிதாவே, ஒரு அற்புதமான விதத்தில் இன்றிரவை ஆசீர்வதியும். சகலத்தையும் அறிந்தவரே, நானே பேசிக் கொண்டிருக்கவில்லை என்றும், ஆனால் இப்பொழுது இங்கேயிருக்கும் உமது ஆவியானவரைக் கொண்டு தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிற கர்த்தாவே. ஓ, இன்றிரவு தேவனுடைய தூதனானவர் தாமே அவ்வளவு அபிஷேகத்துடனே வருவாராக. கர்த்தாவே, ஜெபத்திற்காக இங்கேயிருக்கும் இந்த ஜனங்கள், அவர்களில் அநேகர், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள், அவர்கள் தாமே ஒரே இசைவோடு இருந்து, தேவனுடைய மகிமையைக் காண்பார்களாக. பிதாவே, அது கூடுமானால், இன்றிரவு அது உம்முடைய தெய்வீக சித்தமாக இருக்குமானால், அவர் தாமே சரியாக இங்கே மேடையின் மேலேயே காணக்கூடிய விதத்தில் பிரத்தியட்சமாகி, இங்கேயுள்ள ஒவ்வொரு கண்ணும் அவருடைய மகத்தான உருவைக் கண்டு சாட்சி கொடுப்பதாக. ஓ, அவர் இப்பொழுது அருகில் நிற்கிறார் என்பதை நான் அறிவேன். தேவனே, நீர் அருகில் இருக்கிறீர் என்பதை அறிந்து கொள்ளும்படியாக இன்றிரவு அவிசுவாசிகளுக்கு உதவி செய்யும், உமது ஊழியக்காரன் சத்தியத்தையே கூறியிருக்கிறான். கர்த்தாவே, நான் சத்தியத்தைக் கூறியிருப்பேன் என்றால், நீர் தாமே அதைக் குறித்துப் பேசுவீர், நீரே சத்தியமாயிருக்கிறீர். நீர் சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறீர். பிதாவே, நான் உம்மைக் குறித்துப் பேசியிருக்கிறேன், எனவே அது சத்தியம் என்று எனக்குத் தெரியும். ஒரு கவலையும் இல்லை, ஆனால் இன்றிரவு உம்முடைய இந்த ஜனங்களுக்கு முன்பாக, அது சத்தியம் என்று நீர் நிரூபிப்பீர். இது ஒரு மகத்தான மகிமையான கூட்டமாக இருப்பதாக, கர்த்தாவே, நாளை பிற்பகலில், உண்மையில் நூற்றுக்கணக்கான ஆத்துமாக்கள் உம்மைக் கண்டுகொள்வார்களாக. கர்த்தாவே, தொடர்ச்சியான கூட்டம் முழுவதிற்கும் நாங்கள் எதற்காக ஜெபித்திருக்கிறோமோ அதற்காக, நாளை இரவு எங்களுக்கு இறுதியான உச்சக்கட்டத்தைத் தாரும். இப்பொழுது எங்களை ஒருமிக்க ஆசீர்வதியும், நாங்கள் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 37மிகவும் காலதாமதமாகி விட்டது, இது சனிக்கிழமையாக இருக்கிறது; நிச்சயமாகவே, நாளைக்கு கொஞ்சம் ஓய்வெடுக்க உங்களால் முடியும். இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களால் எவ்வளவு பயபக்தியாக இருக்க முடியுமோ அவ்வளவு பயபக்தியாக இருங்கள். தொந்தரவு செய்ய வேண்டாம். இங்கேயிருக்கும் இந்தச் சகோதரர்களைக் காண்பதற்காக நான் மிகவும் சந்தோஷமடைகிறேன், இந்த முழு வரிசையான ஒலிப்பதிவு செய்யும் கருவிகள். அவர்கள் கர்த்தருக்காக எப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்: இந்த ஒலிப்பதிவுகள் தேசத்தைச் சுற்றிலும் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவைகள் வீடுகளுக்குள்ளும், அரங்குகளுக்குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் சென்று கொண்டிருக்கின்றன. இந்தக் காரியங்களை அறிமுகப்படுத்தி வைக்க, அன்றொரு நாளில், ஒரு திரைப்படத்தையும் கூட அவர்கள் எங்களுக்குக் காண்பித்தார்கள். இந்த ஒலிப்பதிவுகள் வழியாக நூற்றுக்கணக்கான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டும், சுகமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். அம்மனிதர் தங்கள் இருதயத்தில் அந்தச் செய்தியைப் பெற்றிருப்பதற்காக உங்களுக்கு சந்தோஷம் இல்லையா? ஒருக்கால் அவர்கள் பிரசங்கிகளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஜனங்களிடம் செய்தியைக் கொண்டு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், அவர்கள் என்னிடம் கூறுகின்றனர், உலகத்திலுள்ள மகத்தான பெரிய புகழ்வாய்ந்த மனிதர்கள் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வெளியே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் இக்காரியங்களை இவ்விதமாக ஒரு இரண்டாந்தரமான வழியில் உபயோகிக்க முடியும். இந்தச் செய்தியைக் கேட்கிற ஒவ்வொருவரையும் கர்த்தராகிய இயேசு தாமே ஆசீர்வதிப்பாராக. அவர்கள் இரட்சிக்கப்பட்டு சுகமடைவார்களாக. 38இப்பொழுது, அன்பு நண்பர்களே, கர்த்தருடைய நாமத்தில், தயவுசெய்து, உங்களுக்கு விருப்பமானால், அடுத்த கொஞ்ச நேரங்களுக்கு உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பயபக்தியாகவும், அமைதியாகவும் இருங்கள். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவசரமாய் இருக்க முயற்சிக்கிறேன். மேலும் பிறகு, நாம் ஜெப வரிசையை வரிசையில் அமைப்பதற்கு சற்று முன்பு, ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது கவனியுங்கள், இந்த முழு கட்டிடத்திலும் எங்காவது நான் காணக்கூடிய அல்லது நான் அறிந்திருக்கக் கூடியதாக எனக்குத் தெரிந்த மட்டில், என்னுடைய மனைவியும், திரு. மற்றும் திருமதி. ராபர்ஸன் அவர்களும், திரு. மற்றும் திருமதி. உப்சா அவர்களும், செல்வி பிரௌனும் தவிர இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரும் நான் அறியாதவர்களே, இவர்களை மாத்திரமே எனக்குத் தெரியும், இங்கே பின்னாலிருக்கும் சகோதரன் பாஸ்வர்த் அவர்களும், சகோதரன் ரிச்சி அவர்களும், இங்கேயிருக்கும் இந்த சகோதரனும், சகோதரன் பாக்ஸ்டரும், என்னுடைய மகனையும் தவிர. இப்பொழுது, நீங்கள் வியாதிப்பட்டும் தொல்லைக்குள்ளாகியும் இருக்கிறீர்கள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், இப்பொழுது இங்கே நின்று கொண்டு, இங்கே கொஞ்சம், அநேகமாக 5000க்கும் 6000க்கும் இடைப்பட்ட ஜனங்கள் இங்கே உட்கார்ந்து, ஒவ்வொரு கண்ணும் உங்களையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, இப்பொழுது அங்கே உள்ளே கடல் அலைகளென குளிர்ந்து போன நாஸ்திகர்களும் (சந்தேகிக்கிறவர்களும்) மற்றும் எல்லாமும் உள்ளே வந்துக் கொண்டிருப்பதை உங்களால் உணரக்கூடியதான, என்னுடைய இடத்தை எடுத்துக் கொள்ள நீங்கள் எவ்வாறு விரும்புவீர்கள். சாத்தானும், பிசாசின் வல்லமைகளும் ஓயாமல் உள்ளே வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வாறு உணருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படியே அலைகளுக்குப் பிறகு அலைகளாக குளிர்ந்து போன அலைகள்; அதன்பிறகு இதோ விசுவாசமானது உள்ளே வந்து கொண்டிருக்கிறது, ஒரு குளிர்ந்த அலையும் இதோ வருகிறது. இந்த வானொலி, தொலைக்காட்சி, அது என்னவாக இருந்தாலும் அதைப் போன்று, அலைகளும், ஒளி அலைவரிசைகளும் (channels) உள்ளே வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அலைகளாக இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விதமான படிகத்தின் மேல் அல்லது அது எதுவாக இருந்தாலும் அதன்மேல் கொண்டு வரப்பட்ட அலைகளாக அது உருவாக்கப்படுகிறது. 39அவ்விதமாகவே, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமையும் உருவாக்குகிறது (materialize). தரிசனமானது அப்படியே வானொலியைப் போன்றோ, தொலைக்காட்சியைப் போன்றோ உங்களுக்கு முன்பாக உருவாகிறது; தேவன் அவ்விதமாக அதைச் செய்யும்படியாக உங்களை அழைத்திருப்பாரென்றால். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது செய்கிறது. அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அமைதியாக நீங்கள் இருக்கும்படி நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளப் போகிறேன், சுற்றிலும் சலசலப்பு செய்து பரபரப்பு உண்டாக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் நிச்சயமாகவே ஒரு தடங்கலாக இருக்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் எல்லாரும் உங்கள் இருதயத்தில் அமைதியோடு எனக்காக ஜெபியுங்கள். அவ்வாறு செய்வீர்களா? அப்படியானால், நீங்கள் நேசிக்கிற தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படியாக நான் இங்கேயிருக்கிறேன். ஏதோவொரு மகிமையான நாளில், நீங்களும் நானும், இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரும் நமது ஜீவியங்களுக்கு கணக்கு ஒப்புவிக்கும்படியாக தேவனுக்கு முன்பாக நிற்போம், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று. நான் அந்நாளில் நின்று கொண்டு, 'அன்புள்ள தேவனே, நான் நியூயார்க்கில் இருந்த போது, என்னுடைய முழு இருதயத்தோடும், என்னால் கூடுமான ஒவ்வொரு வழியிலும் உம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சித்தேன். நீர் இறங்கி வந்து, நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேனோ அது சத்தியம் என்று நிரூபித்தீர் என்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்' என்று கூற விரும்புகிறேன். அப்படியானால் நீங்கள் அதனோடு என்ன செய்தீர்களோ அது உங்களைப் பொறுத்தது. நான் அப்போது விடுதலையாயிருப்பேன், பழங்காலத்துப் பவுல், 'எல்லா மனிதருடைய இரத்தத்திற்கும் நான் விடுதலையாயிருக்கிறேன்' என்று கூறினது போல. அந்த நேரம் வரும்போது, நான் விடுதலையாயிருப்பேன், நான் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பேன் என்றால், அது சத்தியம் என்று தேவன் நிரூபிக்கிறார். 40இங்கே மேடையில் இருக்கும் யாரோ ஒருவர் சுகமடையும் போது, அங்கே வெளியே வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும், அவர்கள் சரியாக அந்நேரத்திலேயே விசுவாசிக்கட்டும். உங்களுக்காக நீங்களே விசுவாசியுங்கள், தேவன் உங்களைச் சுகப்படுத்துவார். அதை ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசியுங்கள். சரி. பில்லி எங்கே? (என்ன... நீ எங்கே... சரி, அப்படியானால் நாம் ஒ-50லிருந்து துவங்கலாம், 50லிருந்து 65 வரை. அது எப்படி இருக்கும்?) சரி. எழுத்து ஒ ஐம்பது முதல் நூறு வரை ...லிருந்து இன்று, தான் ஜெப அட்டைகளை விநியோகித்திருப்பதாக பில்லி கூறினான். நாம் முதல் 15 பேரை எழுந்து நிற்கச் செய்வோம். முதலாவதாக அந்த வரிசையிலுள்ள முதல் 15 பேர் ஜெபிக்கும்படியாக எழுந்து நில்லுங்கள். ஜெப அட்டை ஒ50, ஒ51, 52, 53, 54, 55 வைத்திருக்கிறவர்கள், ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிற ஒவ்வொருவரும், இப்பொழுது உங்கள் ஜெப அட்டையைப் பாருங்கள், உங்களிடம் எந்த எண் உள்ளது என்று பாருங்கள். உங்கள் ஓரமாக அந்தப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் சரிபார்த்து, அங்கே யாராவது காது கேளாமலோ, அந்த ஜெப அட்டை எண்ணை வைத்துக் கொண்டு இதைக் கேட்க முடியாமலோ இருக்கிறார்களா என்று பாருங்கள். உதவிக்காரர்களுக்கு விருப்பமானால், கட்டில்கள் அல்லது நாற்காலிகளில் இருக்கும் ஜனங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய எண் அழைக்கப்பட்டால் நல்லது, அவர்களை இங்கே மேலே அழைத்து வர முடியும். அவர்களை மேடைக்கு அழைத்து வர வேண்டாம். அவர்களை இங்கே சரியாக எனக்கு முன்பாக கொண்டு வாருங்கள், அப்பொழுது தான் என்னால் அந்த நபரைப் பார்க்க முடிந்து, அவர்களுக்கு என்ன கோளாறு இருக்கிறது என்று காண முடியும். இங்கே என்னால் செய்ய முடிந்த காரியம் அது மாத்திரமே; தேவன் என்னை அனுமதிப்பதை மட்டுமே. சரி. நாம் எல்லாரும், 'தேவனுக்கு நன்றி' என்று கூறுவோம். சரி. சரி, பில்லி. உதவிக்காரர்களில் சிலர் அவனுக்கு உதவி செய்யுங்கள். நாம் எல்லாரும், 'இப்பொழுது, நம்பிடுவாய், யாவும் கைகூடிடும்...' என்று பயபக்தியோடே பாடுகையில், நாம் அந்த (ஜெப) வரிசையை வரிசையில் கொண்டு வருவோம். நாம் இவ்விதமாகச் செய்வோம். நாம் அப்படியே நம்முடைய கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய கரங்களை மேலே உயர்த்தி, கர்த்தரை நோக்கி ஒருவிசை பாடுவோம். கர்த்தரை நோக்கிப் பாட உங்களுக்கு விருப்பமில்லையா? நாம் இவ்விதமாக அதைப் பாடுவோம், 'இப்பொழுது நான் விசு...' இங்கேயுள்ள எத்தனை பேர் விசுவாசிகளாய் இருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும், சுற்றிலுமுள்ள எல்லாரும். விசுவாசிகள். ஓ, என்னே! நல்லது, அப்படியானால், நாம் இன்றிரவு முதல்படியின் பக்கத்தில் இருக்கிறோம். ஓ, நண்பர்களே, இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் என்னை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, தேவனுடைய மகிமையைக் காணும்படியாக உங்கள் முழு இருதயத்தோடும் சுவிசேஷத்தை விசுவாசிப்பீர்களா? அற்புதம்! நீங்கள் கர்த்தருடைய மகிமையைக் காண்பீர்கள் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன். அந்தவிதமாகத் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள். அப்பொழுது நீங்கள் கர்த்தருடைய மகிமையைக் காண்பீர்கள். இப்பொழுது, அதைத்தவிர வேறு ஜெப அட்டைகளை வைத்திருக்கிற யாராவது ஒருவர் இங்கே இருப்பார்களானால், சற்று நேரம் உங்கள் எண்ணைப் பிடித்துக் கொள்ளுங்கள். அநேகமாக, ஒருக்கால், இந்த வரிசைக்குள்ளே நீங்கள் அழைக்கப்படுவீர்கள், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ சரியாக அங்கேயே சுகமடைவீர்கள். அப்படியே உங்கள் இருக்கையில் இருந்தவண்ணமாக, ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். (நீங்களா? சரி, நான் வேகமாக போய்க் கொண்டிருக்கிறேன், என்னால் கூடிய மட்டும் துரிதமாக.) நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? இப்பொழுது, ஒருவிதத்தில் அவருக்கு முன்பாக நம்மால் எவ்வளவு கூடுமோ அவ்வளவாக அமைதியாக இருப்போம், அப்படியானால் நாம் நின்று கொண்டிருக்கிற இடத்திலேயே நம்மால் காண முடியும். (பில்லி, 15 முழுவதும் உன்னிடம் வந்து விட்டார்களா? அங்கே ஏறக்குறைய 20 பேர் இருந்தார்கள்.) சரி, இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பயபக்தியாயிருங்கள். சரி. உங்கள் நோயாளியைக் கொண்டு வாருங்கள். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அமைதியாகவும் பயபக்தியாகவும் இப்பொழுது இருங்கள். 41மேலே இந்த வழியில் இருக்கிற எத்தனை பேர் இப்பொழுது விசுவாசிக்கிறீர்கள்? மேலே இந்த வழியில் இருக்கிற எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? கீழே இந்த வழியில் இருக்கிறவர்கள்? இரண்டு பக்கங்களிலும் இருக்கிறவர்கள்? ஓ, சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, அது அற்புதமாக இல்லையா? சகோதரன் லின்ட்சே, அல்லது சகோதரன் பாஸ்வர்த், சகோதரன் ரிச்சி, அதோ பாருங்கள். நாம்... நண்பனே, ஏதோவொன்று சம்பவிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏதோவொன்று அப்படியே... தேவனுக்கு இது தெரியும், என்னைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர், 'ஜனங்கள் உன்னை நம்பும்படி நீ செய்து, நீ ஜெபிக்கும் போது உத்தமமாயிருந்தால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்காது' என்றார். அங்கே எதுவுமே இருக்காது. அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு என்ன வியாதி இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல; நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் ஜெபத்திற்கு முன்பாக அது நிற்காது. இப்பொழுது, நீங்கள் எதை விசுவாசித்தாக வேண்டும்? முதலாவது தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்துவாகிய தேவ குமாரனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். பரிசுத்த ஆவியானவரிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். தூதர்களை விசுவாசியுங்கள். பிறகு, நான் உங்களுக்கு சத்தியத்தையே கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அது அற்புதமானது. நண்பர்களே, நான் அதை ஒரு நோக்கத்துக்காகவே செய்து கொண்டிருக்கிறேன். பாருங்கள்? சத்துருவானவன் என்னிடம் சண்டை போடும் படியாக இங்கே நின்று கொண்டு (உங்களுக்குப் புரிகிறதா?), 'ஓ, அந்த ஒரு கூட்டம் நியூயார்க் ஜனங்கள், அவர்கள் விசுவாசிப்பதில்லை' என்று கூறிக் கொண்டிருக்கிறான். ஆனால் இங்கேயிருக்கும் பரிசுத்த ஆவியானவர், 'அவைகள் தவறாய் உள்ளது; அது தவறு, அவர்கள் விசுவாசிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதை விட்டுச் செல்லும்படியான முதல் படியின் பக்கத்தை அது எனக்குக் கொடுக்கிறது, உங்களுக்குப் புரிகிறதா. சரி. 42இதோ ஒரு சீமாட்டி இங்கே நின்று கொண்டிருக்கிறாள். நீங்கள் தான் அந்த நோயாளி, இல்லையா, சீமாட்டியே? சரி. இப்பொழுது, இந்த சீமாட்டி சுகமடைய விரும்புகிறார்கள். இந்த சீமாட்டியைக் குறித்து ஒரு காரியமும் எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியவே தெரியாது, தேவனுக்குத் தெரியும், என்னுடைய ஜீவியத்தில் நான் இவளை ஒருபோதும் கண்டதேயில்லை, இவளைத் தெரியாது. இவள் எனக்கு முற்றிலும் அந்நியளாயிருக்கிறாள். அவளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறியும்படியாக உலகத்தில் எதுவுமே கிடையாது, தேவன் தான் அதை எனக்கு வெளிப்படுத்த வேண்டும். எனக்குத் தெரியாது; அவள் சுகமடைவதைக் குறித்து ஒரு காரியத்தையும் என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் அவள் ஏற்கனவே சுகமாகி விட்டாள். அவள் சுகமடைய என்ன அவசியமோ அதை 1900 வருடங்களுக்கு முன்பே இயேசு கிறிஸ்து கல்வாரியில் ஆயத்தப்படுத்தி விட்டார். இப்பொழுது, இவள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் அதை ஏற்றுக் கொள்வது தான். அவளுடைய விசுவாசத்தைப் பொறுத்து, அது அவளுக்கு சம்பவிக்கும். சரியாக இப்பொழுதே அவள் தன்னிச்சையாக விசுவாசித்து, அவளுடைய தலையின் மேல் மகத்தான விசுவாசத்தைக் கொண்டிருப்பாள் என்றால், அவள் தொடர்ந்து சென்று, இங்கேயே சுகமடைந்து விடுவாள். அவள் அவ்வளவு அதிகமாக விசுவாசித்தால், சுகமடைய அவளுக்கு இரண்டு, சில வாரங்கள் தேவைப்படும். ஒரு கடுகு விதையளவுக்கு அவளுடைய (விசுவாசம்) கீழே இருந்து, அவள் வெறுமனே அந்த விதமான விசுவாசத்தைக் கொண்டிருந்து, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், அது உங்களை சரியாக அந்த ஒளியினிடத்திற்கு கொண்டு வரும்; அப்படியே அதனோடு தரித்திருங்கள். அதை விசுவாசித்து, அதைக் குறித்து சாட்சி கூறி, அதை அறிக்கை பண்ணுங்கள், அப்போது தேவன் அதை சம்பவிக்கப் பண்ணுவார். 43இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது ஜெப அட்டைகள் இல்லாமல், ஜெபிக்கப்பட விரும்புகிற இங்கே வெளியேயிருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஜெப அட்டைகள் இல்லாமல், ஜெப அட்டைகளைப் பெற்றிராமல், இருக்கிற ஒவ்வொருவரும் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி, அதுதான் வழி. இப்பொழுது, பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, நீங்கள் இந்தவிதமாக நோக்கிப் பாருங்கள், கட்டிடத்தில் எங்காவது, அது சத்தியம் என்று விசுவாசித்து, நீங்கள் வியாதியஸ்தராயிருந்தால், இயேசுவை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொண்டு, 'தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படியாக, என்னுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த, சகோதரன் பிரன்ஹாம் என்னைத் திரும்ப அழைக்கட்டும். இங்கே வெளியிலிருக்கும் என்னை சகோதரன் பிரன்ஹாம் அழைத்து, நான் சுகமாகி விட்டேன் என்று என்னிடம் கூறட்டும்' என்று கூறுங்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்களா? நீங்கள் அவ்வாறு இல்லாமல் - அவ்வாறு செய்யாமல் இருந்தால், ஒருவிதத்தில் ஏனோதானோவென்று அதற்குள் போகிறீர்கள், ஆனால் உண்மையாகவே உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்து, தேவன் இந்த மேடையிலிருந்து என்னுடைய கவனத்தைக் கவர்ந்து, அங்கே வெளியே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எனக்குக் காண்பித்து, உங்களை அழைத்து, நீங்கள் எப்படி இருந்தாலும், நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் பெயர் என்னவாக இருந்தாலும், அதைக் குறித்து எல்லாவற்றையும் (எனக்குக் காண்பிப்பார்). நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது, இப்பொழுதே ஜெபத்தில் இருங்கள், ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். 44பிதாவே, இப்பொழுது எங்களுக்கு உதவி செய்யும். இதோ ஒரு பெண்மணி நின்று கொண்டிருக்கிறாள், அவள் இங்கே என்னுடைய பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறாள். எனக்கு அவளைத் தெரியாது. கர்த்தாவே, நீர் அவளை அறிந்திருக்கிறீர். அவள் எப்படிப்பட்டவள் என்று உமக்குத் தெரியும், அவள் பூமியில் இருந்தது முதற்கொண்டே அவளை போஷித்து வருகிறீர், அவள் விடுகிற ஒவ்வொரு மூச்சும் உமது தெய்வீக கிருபையின் மூலம் தான். அவள் எப்பொழுதாகிலும் புசிக்கிற ஒவ்வொரு துண்டு ஆகாரமும் உமது தெய்வீக கிருபையின் மூலமே தான். கர்த்தாவே, அவள் இங்கே வியாதியோடும் துன்பத்தோடும் நின்று கொண்டிருப்பாளானால், நீர் கிறிஸ்து இயேசுவாகிய உமது குமாரனின் மேலிருந்த ஆவியை இந்தப் பரிதாபமான அபாத்திரமான பாத்திரத்தின் மேல் இறங்கி வரப்பண்ண வேண்டும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அபாத்திரமானவன் என்பது சரிதான், ஆனால் நீர் இன்றிரவு பரிசுத்த கரங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர் என்றால், நீர் அவர்களை எங்கு கண்டுபிடிப்பீர்? நாங்கள் எல்லாரும் பாவம் செய்து, குறுகிய மகிமைக்கு வந்தோம். ஆனால் ஓ, எலியா எங்களைப் போலப் பாடுகளுள்ள மனிதனாய் இருந்தான் என்ற வேதவாக்கியத்தை வாசிக்கும் போது, அது எங்களை எவ்வளவாகத் தைரியப்படுத்துகிறது. அது அவனுடைய- - அவனுடைய நடத்தைகள் அல்ல, அவன் அப்படி இருக்க வேண்டும் என்று நீர் அவனை அழைத்ததாகவும், நீர் அவனுக்குக் கொடுத்த வரத்தைக் கொண்டு அவன் செய்ததாகவுமாக அது இருந்தது. அன்புள்ள தேவனே, இப்பொழுது உதவி செய்யும், கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயின் பாவங்களை அவளுக்கு வெளிப்படுத்தினதும், பிலிப்பு எங்கேயிருந்தான் என்று அவனுக்குக் கூறி, அவர்களுடைய தேவைகளையும் காரணங்களையும் கூறின உமது வல்லமையானது. அவர் தாமே இன்றிரவு வருவாராக. இப்பொழுதும் பிதாவே, நான் உம்மைக் குறித்து சாட்சி பகர்ந்து இருப்பேன் என்றால், நான் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்பதை நிரூபியும். இந்த ஜனங்கள் உம்மை விசுவாசித்து, சுகமடைவார்கள். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, இப்பொழுது, நீங்கள் சற்று நேரம் மிக அதிக தூரத்தில் இருக்க விரும்புகிறேன்.) 45இப்பொழுது, பின்பகுதியில் அதற்கும் பின்னால், உங்களால் சரியாகக் கேட்க முடிகிறதா? சிலசமயங்களில் அபிஷேகமானது மிகவும் பலமாக ஆகும் போது, நான்... நான் போதுமான அளவு சத்தமாக பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். சகோதரர்களே, நீங்கள் அதைக் கவனிப்பீர்களா, அவ்வாறு செய்வீர்களா, எங்காவது அப்படியிருக்கிறதா? இப்பொழுது, சீமாட்டியே, நீயும் நானும் அந்நியர்களாயிருக்கிறோம்; உன்னை எனக்குத் தெரியாது. நான் முழுவதும், முற்றிலுமாக, இயேசு கிறிஸ்துவையே சார்ந்திருக்கிறேன். நீ இங்கே இருக்கிறாய், இங்கே இன்றிரவு இதோ பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் கிறிஸ்தவர்களாக தங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கிறார்கள்; நான் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறார்கள். இப்பொழுது, அது என்னில் எப்படிப்பட்ட ஒரு நிலையை வைக்கிறது என்று பார்க்கிறாயா? நீ அங்கேயிருக்கும் கூட்டத்தினரிடத்திலிருந்து இங்கே மேலே வந்திருக்கிறாய், நீ முழுவதும் அந்நிய ஸ்திரீயாக இருக்கிறாய், நீ அதன் மேல் ஒரு எண்ணைக் கொண்ட ஒரு ஜெப அட்டையைப் பெற்று, இங்கே மேலே வந்திருக்கிறாய். உன்னுடைய எண் அழைக்கப்பட நேர்ந்தது. இந்த இரவில் முதலாவது நபர் நீ தான். என்னே, எவ்வளவு அற்புதமாயுள்ளது. 46இப்பொழுது, என்னால் எதையாகிலும் அறிய முடியுமானால்... நீங்கள் மிக வேகமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், பயபக்தியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். ஏதோவொன்று வினோதமாயுள்ளதாக உணருகிறீர்களா? இப்பொழுது, அதுதான் கர்த்தருடைய தூதனானவர். கூட்டத்தினரே, இது எவ்வாறு இறங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை உணரும்படிக்கு இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் போதுமான அளவு நெருக்கமாக இருக்கும்படி நான் விரும்புகிறேன். அது இறங்கி வந்து கொண்டிருக்கிறது. அது இப்பொழுது சரியாக என்னுடைய வலது பக்கத்திலிருந்து உள்ளே வந்து கொண்டிருக்கிறது, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் அவருக்கு முன்பாக நிற்க வேண்டியதாய் இருக்கும், அவர் தான் தேவனுடைய தூதனானவர், அவர் என்மேல் அசைவாடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இந்தச் சீமாட்டி அதைக் குறித்து மிகவும் உணர்வுடையவளாக ஆகிக் கொண்டிருக்கிறாள். ஒரு தரிசனம் புறப்பட்டு செல்வதை நான் காண்கிறேன். அவள் இப்பொழுது என்னிடமிருந்து தூரமாய் சென்று கொண்டிருக்கிறாள். ஓ, என்னவொரு ஜீவன். சகோதரியே, என்னை நோக்கிப் பார். நீ விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாய், இல்லையா? ஒரு காரியத்திற்காக நீ ஆஸ்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்; நீ சிலசமயங்களில் அதைக் கூட கொண்டிருந்தாய். உதாரணமாக, நீ ஒரு அறுவை சிகிச்சையின் கீழ் அல்லது ஏதோவொன்றின் கீழ் இருந்தாய் என்பதை நான் காண்கிறேன்; சிலசமயங்களில் அதுவும் கூட இருந்து வருகிறது. ஒரு கறுத்த நிறமுடைய மருத்துவரைப் பார்க்கிறேன், அவர் நின்று கொண்டிருக்கிறதாகக் காணப்படுகிறது, அங்கே சாம்பல் நிற சூட்டை அணிந்திருக்கிற யாரோ ஒருவர் ஒரு முகப்புக் கூடத்தில் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் உனக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். ஆமாம், நீ, ஒரு... பெற்றிருக்கிறாய். நீயும் கூட ஒரு பரிசோதனையிலிருந்து இப்பொழுது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய், அங்கே ஒரு கட்டி இருக்கிறது. அது சரியல்லவா? அந்த கட்டியானது உன்னுடைய மார்பில் உள்ளது, இல்லையா? இடது பக்க மார்பில், இடது பக்கத்தில். நீ படுத்துக் கொண்டிருக்கிற மேசையின் பக்கத்தை நான் காண்கிறேன், அங்கிருந்து தான் அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பயப்படாதே. அது இப்பொழுது என்னை விட்டுப் போகிறது. கொஞ்சம் பொறு. நீ தேவனை எவ்வாறு சேவித்துக் கொண்டிருக்கிறாயோ அதைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான வகையில், நீயும் கூட தேவனை சேவிக்க விரும்புகிறாய். உன்னால் சுகமடையக் கூடுமானால், நீ தொடர்ந்து சென்று, தேவனுடைய ஆழமான காரியங்களைத் தேடுவாய் என்று நீ தேவனிடம் வாக்குக் கொடுத்திருக்கிறாய், இல்லையா? ஒரு நாற்காலி கிடக்கிற இடத்திலிருக்கும் ஒரு படுக்கையின் பக்கத்துக்கு அருகில் நீ ஜெபித்துக் கொண்டு, உட்கார்ந்து கொண்டிருந்தாய். அது சரிதானே? அங்கே அந்த அறையில் உள்ள சுவரின் பக்கத்தில் சிறிய பச்சை நிறமாகத் தோற்றமளிக்கிற காரியம் தொங்கிக் கொண்டிருக்கிறது, (அது சரியல்லவா?). நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? நான் உன்னிடம் கூறுபவைகளை நீ ஏற்றுக் கொள்வாயா? இப்பொழுது இயேசுவை உன்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வாயா? உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தி, 'நான் இப்பொழுது இயேசு கிறிஸ்துவை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளுகிறேன்' என்று கூறுங்கள். சமாதானத்தோடு செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்கி விடுவார்...?... ஆமென். இப்பொழுது உங்கள் பாதையில் களிகூர்ந்தபடியே சென்று, உங்களுடைய வியாதியிலிருந்து சுகமடையுங்கள்...?... அப்படியே களிகூர்ந்தபடியே இந்தவழியாகப் போங்கள், சகோதரியே. நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். 47இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். நான் நானாக இந்தக் காரியங்களைப் பேசவில்லை என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன்; அது என்னுடைய சத்தமல்ல; இது என்னுடைய சத்தம் தான், ஆனால் இதை உபயோகித்துக் கொண்டிருப்பது நானல்ல. நான் வேறொரு இடத்திற்குள் சென்று, எனக்கு முன்பாக உருவாகிறதைக் காண்கிறேன். அந்த ஜனங்கள் தூரமாகப் போகிறார்கள். சற்று முன்பு ஜெபித்த அந்த நபரில் என்ன கோளாறு இருந்தது என்பதை இச்சமயத்தில் என்னால் உங்களிடம் கூற இயலாது. நான் அப்படியே ஒரு தரிசனத்தைக் கண்டு, அது என்னிடம் வருகிறபடியே அதைப் பேச வேண்டியதாய் உள்ளது. அதன்பிறகு அது சரியா அல்லது தவறா என்று அது என்னை விட்டு விலகிப் போன பிறகு அந்த நபர் சாட்சி கூறுகிறார். சரி, அந்த நோயாளியை கொண்டு வாருங்கள், ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியாயிருங்கள். வணக்கம், ஐயா. நிச்சயமாகவே, உம்முடைய உடையைக் கொண்டு நீர் ஒரு ஊழியக்காரர் என்று அறிந்து கொள்கிறேன். ஐயா, சற்று கொஞ்சம் அருகில் வருவீர்களா? சகோதரனே, நம்முடைய கிறிஸ்து அற்புதமானவர், இல்லையா? நீர் முற்றிலும் ஒரு விசுவாசி என்று காண்கிறேன். ஆம், ஐயா, நான் அவ்வாறு தான் காண்கிறேன். உதாரணமாக, நீர், நீராகவே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒரு ஊழியத்தைக் கொண்டிருக்கிறீர். நீர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறீர், இல்லையா? நீர் அதே காரியத்தின் பேரில் அதிகமான இலக்கியம் மற்றும் காரியங்களை எழுதுகிறீர், இல்லையா? நீர் கனடாவிலிருந்து வருகிறீர், இல்லையா? அது உண்மை. உம்முடைய குடல்களில் ஏதோ கோளாறினால் நீர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர். நான் கூறுகிறேன், அது... அது குடல்களில் உள்ள புற்று நோயாக உள்ளது, அதுதான் அது. அது புண்பிடித்து, உமக்கு அதிக தொல்லை ஏற்பட காரணமாகத் தொடங்கியிருக்கிறது. அது உண்மை அல்லவா? என்னுடைய சகோதரனே, நான் உம்முடைய கரத்தைப் பிடிக்கட்டும். 48இரக்கமுள்ள தேவனே, இப்பொழுது என்னுடைய கரத்தால் இந்தக் கரத்தைப் பிடிக்கிறேன், இந்த கரம் தான் வேதனையிலிருந்து விடுதலையைக் கொண்டு வருவதற்கான வார்த்தைகளை எழுதுகிறது. இந்த யுத்த வீரரை அழித்துப் போடும்படியாக சாத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவரைச் சுகமாக்கும்படியாக நீர் இங்கே இருக்கிறீர். ஓ சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல வரத்தையும் அருளுபவரே, நான் உமது நாமத்தில் பேசுகையில், உமது ஆசீர்வாதங்களை என்னுடைய சகோதரன் மேல் அனுப்பும். தேவனே, உமது ஊழியக்காரன் உம்முடைய பார்வையில் தயவைக் கண்டு கொண்டிருப்பாரென்றால், என்னுடைய சகோதரனுடைய ஜீவனை (அவருக்குக்) கொடும். இந்த இரவு முதற்கொண்டு அவர் சுகம் அடைவாராக, மகத்தான உதவியை உண்மையில் ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு கொள்ளக் காரணமாகும்படிக்கு அங்கே ஊழியக்களங்களில் அவர் தாமே ஒரு யுத்த வீரனாக இருப்பாராக. இதை அருளும், கர்த்தாவே. புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்தப் பிசாசை நான் இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சபிக்கிறேன், அது அவரை விட்டு வெளியே வருவதாக, இந்த மனிதர் பிழைத்துக் கொள்வாராக. என்னுடைய சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உமது தீரமான விசுவாசம் உம்மை இரட்சித்தது. நீர் வீட்டிற்குப் போகலாம், உம்முடைய ஊழியம் அதிகரிக்கப் போகிறது, நீர் எப்பொழுதும் செய்திருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக கர்த்தருக்குச் செய்யப் போகிறீர். எனது சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக...?... நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். 49சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, அந்த மனிதரை உமக்குத் தெரியுமா? நல்லது, நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லுவோம். (சகோதரன் பாக்ஸ்டர் பேசுகிறார்: 'நான் இந்த மனிதரைக் குறித்து ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்: நியூயார்க்குக்கு வருவதைக் குறித்து அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். நான், 'வாரும்' என்றேன். நான், 'என்னால் எதையும் வாக்குக் கொடுக்க முடியாது' என்றேன். ஆனால் அந்த மனிதர் இலக்கியத்தை எழுதினதாக சகோதரன் பிரன்ஹாம் கூறின போது, நான் ஏறக்குறைய துள்ளிக் குதிக்க ஆயத்தமானேன், ஏனென்றால் எனக்கு எழுதின அவருடைய கடைசி கடிதம், அவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்த அவருடைய இலக்கியங்கள் சிலவற்றை எனக்கு அனுப்பியிருந்தார். அந்த மனிதரைக் குறித்து சகோதரன் பிரன்ஹாம் கூறின யாவும் உண்மையே, சகோதரன் பிரன்ஹாமுக்கு அது தெரியாது' என்று கூறுகிறார் - ஆசிரியர்.) தேவன் எனக்கு எதைக் காட்டினாரோ அதை மட்டுமே, என்ன கூற வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினதை மாத்திரமே என்னால் கூற முடியும். என்னால் செய்யக் கூடியது யாதெனில், எனக்கு முன்பாக அவர் உருவாக்குகிறதை மாத்திரமே என்னால் காண முடியும். வேறு எதையும் என்னால் செய்ய முடியாது. ஆனால் அம்மனிதர் அந்தப் புற்று நோயினால் மரிக்கப் போவதில்லை; அவர் பிழைக்கப் போகிறார். 50சரி, அந்த நோயாளியைக் கொண்டு வாருங்கள். வணக்கம், சகோதரியே? நீ அப்படியே கொஞ்சம் அருகில் வருவாயா? நீ அருகில் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுது அது பேசத் துவங்கும் போது, அது... உன்னுடைய சத்தமானது ஒலிப்பெருக்கியில் கேட்கும் என்பதை நான் அறிந்து கொள்வேன். உனக்குப் புரிகிறதா? நீ ஒரு கிறிஸ்தவள் என்று அறிகிறேன். ஆம். நீ சமீப காலமாக மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிக்கிறாய். நீ... ஏதோவொன்று உன்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நீ அறையினுள் நின்று கொண்டிருக்கும் போது, நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். உதாரணமாக, அது உன்னுடைய... ல் இருக்கிறது. அது ஒரு - அது ஒரு கட்டி, இல்லையா? ஒரு கட்டி தான் உன்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டி, நீ அதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன்; அது... அது உன்னுடைய வாயில் இருக்கிறது, இல்லையா? உன்னுடைய வாயில் ஒரு கட்டி இருக்கிறது. அது உண்மை. அப்போது அங்கே ஏதோவொன்று சம்பவித்தது, இல்லையா? சகோதரியே, அந்தக் கட்டியினுடைய ஜீவன் போய் விட்டது. நீ சுகமடைந்தவளாக வீட்டிற்குப் போகலாம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இவள் சுகமடைவாளாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று நாம் கூறுவோம். சரி. தயவுசெய்து, அந்தச் சீமாட்டி வருவார்களா? 51ஓ, என்னவொரு அற்புதமான நேரம். நீ இப்பொழுது அதை உணர்ந்திருக்க வேண்டும். இப்பொழுது விசுவாசமானது எல்லாவிடங்களிலும் அசைந்து கொண்டிருக்கிறது, அப்படியே உள்ளே வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு அற்புதமாயுள்ளது. ஓ, இந்த ஒரு காரியத்தை மாத்திரம் என்னால் ஜனங்களிடம் சற்று முன்பு கொண்டு வர முடிந்திருக்குமானால். என்ன சம்பவித்தது, அந்த மகிமை எப்படியிருக்கும் என்று தெரியாது. இப்பொழுது, நாம் பார்க்கலாம், நீங்கள்... சகோதரியே, என்னை மன்னித்துக் கொள், அது ஒருவிதத்தில் கொஞ்சம் எனக்கு அருகில் வருகிறது. அப்படியே சற்று அருகில் வாருங்கள். (நாம்) மனிதர்களாக பேசியிருக்கிறோம் என்றும், நான் உங்களை எப்பொழுதாகிலும் கண்டிருக்கிறேன் என்றும் நான்-நான்-நான் நம்பவில்லை. நாம் அந்நியர்களாயிருக்கிறோமா? ஆமாம், பெருமாட்டியே. இப்பொழுது, நான் அப்படியே வெறுமனே உங்களுக்கு உதவி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்ட போது, அது என்னவொரு சந்தோஷமாயிருந்தது. நீங்கள் அழுது கொண்டு, உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுவதை நான் பார்க்கிறேன். இப்பொழுது, நீங்கள் தொல்லையோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் மிகவும் நரம்புத்தளர்ச்சியைக் கொண்டிருக்கிறீர்கள்; அது உங்கள் மேல் சில காலமாக இருந்து வருகிறது. அதற்கு உங்களுடைய வயது தான் காரணம், மாதவிடாய் தான் காரணம், உங்களுடைய மாதவிடாய். பிறகு உங்களுக்கிருக்கிற ஸ்திரீகளுக்குரிய கோளாறு உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன், இல்லையா? ஆமாம், பெருமாட்டியே. வயிறு அதிகமாக நிலைகுலைந்து போயுள்ளது. அது உண்மை அல்லவா? சொல்லப்பட்டது உண்மை தானா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தி, 'இயேசு கிறிஸ்துவே, நீர் என்னுடைய சுகத்திற்காக மரித்தீர் என்று நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். இப்பொழுது நான் என்னுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்' என்று கூறுங்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு விருப்பமான எதையும் சென்று புசியுங்கள், அந்தப் போக்கு நின்று விடும். அது கருப்பையின் மேலுள்ள ஒரு கட்டியாக இருந்தது, ஆனால் இப்பொழுது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள், போகலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. 52நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். தயவுசெய்து, உங்களுக்கு விருப்பமானால், ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள், சற்று நேரம் அப்படியே பயபக்தியாயிருங்கள். சுற்றிலும் போகாதீர்கள். அது இங்கே மிகவும் மோசமாக என்னைக் குறுக்கிடுகிறது. எவ்வளவு அழுத்தமாக அசைந்து கொண்டிருந்தது என்றும், ஜனங்களுக்கிடையே எவ்வளவு முரண்பாடுகள் உள்ளன என்றும் நீங்கள் அறிந்திருந்தீர்களானால். பாருங்கள், நீங்கள் ஒரு இயற்கைக்கு மேம்பட்டதினுடைய வரிசையில் இருக்கிறீர்கள், மிகக் சிறிய அசைவிலும் அது குறுக்கிடுவதை உங்களால் உணர முடியும், அது என்னை இங்கே மேலே வெளியே கொண்டு வருகிறது. தயவுசெய்து, பயபக்தியாயிருங்கள். இயேசு ஒரு மனிதனைப் பிடித்துக் கொண்டு... செய்ததில் வியப்பில்லை. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, அதைக் குறித்து என்ன?' என்று கேட்கலாம். ஏன், இயேசு ஒரு மனிதனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, அவனை கூட்டத்தினரை விட்டுத் தூரமாகக் கொண்டு போகும்படிக்கு பட்டணத்திற்கு வெளியே வழிநடத்திச் சென்றார். அது சரியல்லவா? பேதுருவும் யோவானும், 'என்னை நோக்கிப் பார்' என்று கூறினதாக எழுதப்பட்டுள்ளது. சரி. வாருங்கள், ஐயா. தயவுசெய்து, சற்று நேரம், மிகவும் பயபக்தியாயிருங்கள். காலதாமதமாகி விட்டது என்று எனக்குத் தெரியும், ஆனால் உபத்திரவங்களைக் குறித்து எண்ணிப் பாருங்கள். நீங்கள் பகலில் மேயோ மருத்துவமனையில் உள்ளேயும் வெளியேயும் காத்துக் கொண்டிருந்தீர்கள். நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மேயோ மருத்துவமனையில் இருந்தேன். என்னுடைய இருதயத்தை சிலிர்க்கச் செய்யும் அற்புதமான காரியம் என்னவெனில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, மேயோ மருத்துவமனை, என்னுடைய சிறு புத்தகத்திற்காக (கடிதம்) எழுதியிருந்தது, நீங்கள் அங்கே அந்த மரச்சட்டத்தில் திரும்ப வாங்கிக் கொள்ளும் தெய்வீக சுகமளித்தலைக் குறித்த அந்த புத்தகம் தான் அது, அவர்களுடைய மாணவர்களுக்கான அவர்களுடைய - அவர்களுடைய - அவர்களுடைய நூலகத்தில் போகும்படிக்கு. தெய்வீக சுகமளித்தலின் பேரிலான என்னுடைய புத்தகம் வேண்டி மேயோ மருத்துவமனை (கடிதம்) எழுதியிருந்தது, இந்த அற்புதங்கள் எப்படி நடந்தன என்று அறிய அவர்கள் விரும்பினார்கள். அவர்களால் அதை மறுக்க முடியவில்லை, ஆனால் அது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்றும், அது எவ்வாறு செய்யப்பட்டது என்றும் படிக்க அவர்கள் விரும்புகின்றனர். தேவனுக்கு ஸ்தோத்திரம். அவை எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிற புத்தகம் இதோ இருக்கிறது. தேவனுடைய இரகசியத்தை இது வெளிப்படுத்துகிறது. 53சரி, சகோதரனே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உம்முடைய நீரிழிவு நோய் உம்மை விட்டுப் போய் விட்டது, எனவே நீர் மேடையை விட்டுப் போய் சந்தோஷமாக இருக்க முடியும். சரி, நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். சரி, அந்த சீமாட்டியைக் கொண்டு வாருங்கள். சகோதரியே, விசுவாசமாய் இருங்கள். நீங்களும் அதே காரியத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தீர்கள், இல்லையா? நீங்களும் கூட மேடையை விட்டுச் சென்று, கர்த்தருடைய நாமத்தில் சுகமடையுங்கள். ஆமென். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, அங்கே பின்னால் இருக்கிறவர்களைக் குறித்து என்ன? விசுவாசித்துக் கொண்டே செல்கிறார்கள். கர்த்தர் இந்தக் கூட்டத்தினர் மேல் சற்று நேரத்தில் பலமாக இறங்கப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள்; விசுவாசியுங்கள். 54அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களே, நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அந்த சக்கர நாற்காலியில் இருக்கும் சீமாட்டியே, நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? அந்தச் செவிலியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அவள் தேவனைக் குறித்து அறிந்தவள். சரி. அந்த சக்கர நாற்காலியில் படுத்திருக்கிற ஐயா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது விசுவாசம் கொண்டிருங்கள். தேவனால் செய்ய முடியும்... அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார், உங்கள் விசுவாசமானது அப்படியே அதிகரிக்குமானால். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்; சந்தேகப்படாதீர்கள். வரிசையிலுள்ள நீங்கள் எல்லாருமே, இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கப் போகிறீர்களா? சரி, அந்த சீமாட்டியை அழைத்து வாருங்கள். சற்று முன்பு நமது மத்தியில் நின்று கொண்டிருந்த - நான் கீழே நோக்கிப் பார்த்து, 66 வருடங்களாக நோயாளியாக இருந்த காங்கிரஸ்காரர் உப்சாவைக் காண்கிறேன். ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டவர், தேசம் முழுவதும், எல்லாவிடங்களிலும், இங்கிலாந்திலும் அறியப்பட்டவர். அந்த மனிதர் ஒரு இடத்...க்கு (வந்திருந்தார்). அதே காரியம் தான் சரியாக இங்கேயும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது, கலிபோர்னியாவில் நடந்த கூட்டங்களில் ஒன்றில் அவர் உருட்டிக் கொண்டு வரப்பட்ட போது அதே காரியம் தான் நடந்தது. அந்த மனிதர் காயப்படுவதையும் அவர் கடந்து சென்ற எல்லா காரியங்களையும் நான் கண்டேன். அங்கே, அவர் அங்கே இருந்தார், 66 வருடங்களாக ஒரு நோயாளியாக இருந்து வந்தார்; நான், 'ஒரு வாலிபனை நான் காண்கிறேன்; அவர் ஒரு... ஒரு வைக்கோல் போருக்கு அருகில் ஒரு வைக்கோல் கட்டுமானத்தினாலே அவர் காயப்பட்டிருக்கிறார்' என்றேன். ஒரு மருத்துவருடைய விதத்தையும் மற்ற காரியங்களையும், அவர் செய்திருந்த எல்லாவற்றையும் கூறினேன். எனவே சகோதரன் பாக்ஸ்டர் வந்து என்னிடம் கூறினார், அவர், 'அது...' என்றார். 55அவர் எங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்பதை நான் கண்டேன், அங்கே அந்த மனிதர், 'நல்லது, அந்த மனிதர் ஒரு காங்கிரஸ்காரர். அவர் அவ்விதமாக வருடக்கணக்காக இருந்து வருகிறார்' என்றார். நான் புறப்படத் துவங்கினேன். நான் அங்கிருந்து செல்லத் துவங்கின போது, திரு. உப்சா அவர்கள் ஊன்று கோல்களோ அல்லது சக்கரநாற்காலியோ அல்லது எதுவுமோ இல்லாமல் போய்க் கொண்டிருந்ததை, அவரால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு வேகமாக நடந்து போய்க் கொண்டிருப்பதை நான் கண்டேன். 66 வருடங்களாக முடமானவராக இருந்த பிறகு அந்த மனிதர் அங்கே இருந்தார், நான், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்றேன். இதோ அவர் இன்றிரவு, 85 வயதுள்ளவராய், 30 வயதுள்ள எந்த மனிதனும் (நடப்பது போல) அவ்வளவு வேகமாக கட்டிடத்தில் (நடக்கிறார்). அவர் சுகமடைந்திருப்பார் என்றால், அவருடைய எலும்புகள் நல்ல கால்சியம் மற்றும் காரியத்தைக் கொண்டிருந்த போது இருந்ததைப் போன்று காணப்பட்டது, அவர் அங்கே மறுபடியும் சுகமடைந்தார். ஆனால் தேவனால் சகலத்தையும் செய்ய முடியும் என்பதை தேவன் தம்முடைய வல்லமையில் காண்பிக்கிறார். அவர்... இருந்த ஒரு தேவனாயிருக்கிறார்... இதோ அவர் இப்பொழுது தம்முடைய கரங்களை உங்களை நோக்கி அசைத்துக் கொண்டிருக்கிறார். ஆச்சரியமான கிருபை, அந்த தொனி எவ்வளவு இனிமையானது. 56சரி, சீமாட்டியே, நீ அங்கே நின்று கொண்டிருந்த போதே உன்னுடைய இருதயக் கோளாறு உன்னை விட்டுப் போய் விட்டது. நீ களிகூர்ந்தபடியே பாதையில் சென்று, சந்தோஷமாயிரு. வாருங்கள், சீமாட்டியே. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பழைய கட்டி நீங்கிப் போக வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லையா? நீங்கள் சந்தோஷத்தோடே மேடையை விட்டுப் வெளியே போங்கள்; அது உங்களை விட்டுப் போய் விட்டது. நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். அங்கே வெளியேயுள்ள யாரோ ஒருவர் இப்பொழுது ஜெபித்து, இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறார். இப்பொழுது, அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில், 'நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறுங்கள். பிற்பகுதிக்கும் பின்னால், அங்கே மேலே. தயவுசெய்து, ஒவ்வொருவரும், பயபக்தியாயிருங்கள். நீங்கள் விரும்பினால் பயபக்தியாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள்; விசுவாசியுங்கள். வாருங்கள், சீமாட்டியே. விசுவாசியுங்கள். வணக்கம், சகோதரியே? சற்று நேரம் உங்களோடு பேச விரும்புகிறேன். ஆமாம், பெருமாட்டியே. எல்லாமே உங்களுக்குத் தவறாயுள்ளது என்று நீங்கள்—நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள், இருதயக் கோளாறு. அந்த இருதயக் கோளாறுக்குக் காரணம் அஜீரணம் தான். சாப்பிட்ட பிறகு படுக்கும் போது, அது உங்களுக்கு மோசமாக உள்ளது, இல்லையா? உங்களுடைய முழு கோளாறும் நரம்புத்தளர்ச்சியாக (பதட்டமாக) இருக்கிறது. அது சரியல்லவா? நீங்கள்... அது ஒரு மனரீதியிலான நரம்புத்தளர்ச்சியாகவும் கூட இருக்கிறது. நான் காண்கிறேன் நீங்கள்-நீங்கள்... இவ்விதமாக உங்கள் தலையைப் பிடித்துக் கொண்டு, நடந்து செல்வதை நான் காண்கிறேன். சிலசமயங்களில் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியல்லவா? ஆனால் இயேசு கிறிஸ்து இப்பொழுது உங்களைச் சுகமாக்குகிறார். களிகூர்ந்தபடியே உங்கள் பாதையில் செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள்... நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். சரி, ஐயா, வாருங்கள். நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? அப்படியானால் இனிமேல் இருதயக் கோளாறு உமக்கு இருக்காது. நீர் மேடையை விட்டுச் சென்று சுகமாயிருக்கலாம். எனது சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். 57அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதர் தம்முடைய முழங்கால்களை இழுத்துக் கொண்டு, ஜெபித்துக் கதறிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அவர் தம்முடைய காதில் ஏதோவொரு காரியத்தைக் அடைத்து வைத்திருக்கிறார். நீர் விசுவாசிக்கிறீரா, ஐயா. ஏனென்றால் உம்முடைய காதில் ஏதோவொரு கோளாறு உமக்குள்ளதை நான் காண்கிறேன். அந்தக் காதை தேவனால் சுகமாக்க முடியும், இல்லையா? நீர் அதை விசுவாசிக்கிறீரா? அப்படியே ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். ஓ, காதிலுள்ள கோளாறு அதிகம் அல்ல; நீர் வயிற்றுக் கோளாறினால் அவதிப்படுகிறீர். அது உண்மை அல்லவா? அது சரி என்றால், உம்முடைய கரத்தை உயர்த்தும். அது சரியே. வீட்டிற்குச் சென்று, உமக்கு விரும்பமானதை புசியும். இயேசு கிறிஸ்து உம்மைச் சுகமாக்குகிறார். ஆமென். இப்பொழுது, நீங்கள் எல்லாரும் சந்தோஷமாய் இருக்கலாம். சரி, வாருங்கள், சகோதரியே. உங்களுக்கும் எனக்கும் இடையே, இரத்தம் துளித்துளியாக விழுவதை நான் காண்கிறேன், அது மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. அதில் சர்க்கரை உள்ளது போன்றோ அல்லது அதில் தண்ணீர் உள்ளது போன்றோ தோற்றமளிக்கிறது. உங்களுக்கு இரத்த சோகை உள்ளது, இல்லையா? மேடையை விட்டுச் சென்று, தேவனிடத்திலிருந்த வந்த குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் மூலமாக கல்வாரியிலிருந்து இரத்தத்தை பெற்றுக் (transfusion) கொள்ளுவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம், 'தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். சரி, உங்களுடைய நோயாளியை அழைத்து வாருங்கள். 58சகோதரியே, நீ வருகையில், உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? நீ மிகவும் வியாதிப்பட்டவள் என்று நான் காண்கிறேன், சத்துருவின் அழுத்தத்தை உணருகிறேன். நீ புற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய், இல்லையா? ஒரு நிமிடம் இங்கே வா. உன்னுடைய கைக்குட்டையை சரியாக இங்கே வை. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? இங்கே வா. நீ என்னுடைய கரத்தை நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். இது வெறுமனே ஒரு சாதாரண மனிதனின் கரமாக இருக்கிறது, இல்லையா? நீ உன்னுடைய கரத்தை இங்கே எனது கரத்தின் மேல் வைக்க நான் விரும்புகிறேன், எனவே நீ என்னைத் தொடுகிறாய். இப்பொழுது, என்ன சம்பவிக்கிறது என்று கவனி. அது வீங்கி விட்டதைப் பார், அந்த வெண்மையான காரியங்கள் அதற்குக் குறுக்கே ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது, நான் உன்னுடைய கரத்தை எடுத்துக் கொண்டு, என்னுடைய கரத்தை வைக்கப் போகிறேன். இப்பொழுது, அது அங்கே இல்லை தானே? உன்னுடைய மற்ற கரத்தை இங்கே வைக்கிறேன். அது இப்பொழுது அங்கே இல்லை, அப்படித்தானே? நல்லது, உன்னுடைய அந்தக் கரம் எவ்வளவு மனிதத் தன்மை உடையதாய் இருக்கிறதோ அவ்வளவு இந்தக் கரத்திலும் உள்ளது. சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, இங்கே வாருங்கள். உமது கரத்தை இங்கே வையுங்கள், இப்பொழுது, அது அங்கே இல்லை, அப்படித்தானே? பில்லி பால், இங்கே வா. அது இப்பொழுது அங்கே இல்லை, அப்படித்தானே? அது இப்பொழுது அங்கே இல்லை. இப்பொழுது, உன்னுடைய கரத்தை அங்கே வை, ஆனால் அது இப்பொழுது இருக்கிறது. அது சரிதானே? அது உண்மையானால், இந்தக் கரத்தை மேலே உயர்த்து, அப்பொழுது கூட்டத்தினர் காணுவார்கள். இப்பொழுது, என்னுடைய கரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது, வெண்மை நிறத்தைப் போன்ற காரியங்கள் அதற்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கின்றன, அது சரிதானே? அவைகளைப் பாருங்கள் - அந்தச் சிறு, அது சிறிய பருக்கள் அல்லது புடைப்புகள் போன்று என்னுடைய கரத்தின் குறுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது, அவைகள் எவ்வாறு வந்து போகின்றன என்பதைக் கவனியுங்கள். அதோ அவைகள் வருகின்றன; அதோ அவைகள் நகருகின்றன; இதோ அவைகள் மீண்டும் வருகின்றன. என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு ஜீவனாக இருக்கிறது, ஒரு புற்று நோய், கொடிய வளர்ச்சி ஒன்று உனக்குள் இருந்து கொண்டு செல்களைப் பெருக்கிக் கொண்டே, உன்னுடைய ஜீவனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. 59நீயும் கூட இதைக் குறித்து அதிகம் ஜெபித்திருக்கிறாய் என்று காண்கிறேன், இல்லையா? எந்த பலனும் இல்லாதது போன்று தோன்றுகிறது. நீ விசுவாசிக்க முயற்சிக்கிறாய்; நீ அதை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறாய். சமீபத்தில் ஜெபித்திருந்தாய், அப்போது நீ உண்மையிலேயே சுகமடையப் போகிறாய் என்று நினைத்தாய், ஆனால் அது அவ்வாறு இல்லாமலிருந்தது நிரூபிக்கப்பட்டது. அது சரியல்லவா? நான் உன்னுடைய மனதை வாசித்துக் கொண்டிருக்கவில்லை; ஆனால் நீ நின்று கொண்டிருந்த இடத்தை நான் காண்கிறேன். அது சரியே. ஆனால் நீ அதைக் கேள்விப்பட்ட போது, நான், அல்லது கண்டாய், நீ ஏதோவொன்றைக் கண்டாய் என்று நம்புகிறேன், ஏதோவொன்றை வாசிக்கிறாய், அல்லது, அது, ஆமாம், நீ கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன், அப்போது நீ, 'நான்... சகோதரன் பிரன்ஹாம், நான் அவருடைய கூட்டத்திற்குப் போகும் போது, அவர் எனக்காக ஜெபிக்கும் போது, நான் சுகமாகப் போகிறேன்' என்று கூறுவதை நான் கேட்டேன். நீ அதைக் கூறினாயா? அது உண்மை என்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. அப்படியானால் சகோதரியே, உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது, அந்த அதிர்வுகள் இப்பொழுது எங்கே? அவைகள் போய் விட்டன. இப்பொழுது, நீ போய் ஜீவிக்கலாம். அம்மா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். 60ஜெபம் வேண்டாம், உங்கள் விசுவாசம் உங்களைச் சுகமாக்குகிறது. அது சரியா? நீங்கள் சந்தோஷமாயிருக்கிறீர்கள், அப்படித்தானே? (அந்தச் சகோதரி, 'நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன், இயேசுவை என்னுடைய இருதயத்தில் பெற்றுக் கொண்டேன்' என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) அது சரியே. அப்போதே இருதயக் கோளாறிலிருந்து அவர் உம்மைச் சுகமாக்கி விட்டார். இப்பொழுது, நீங்கள் சந்தோஷமாக மேடையை விட்டுப் போகலாம், ஏனென்றால் இனிமேலும் உங்களுக்கு இருதயக்கோளாறு இல்லை. நாம் ஒவ்வொருவரும், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். சகோதரியே, உன்னைக் குறித்து என்ன, நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் என்னை விசுவாசிக்கிறாயா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ நரம்புத்தளர்ச்சியினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய், இல்லையா? உன்னுடைய காலூன்றி எழுந்து நின்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமடைவாயாக... விட்டு வெளியே போ. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, இனிமேலும் உனக்கு அந்த உணர்ச்சிகள் இருக்காது. போய் சந்தோஷமாயிரு. நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம். அப்படியே ஏதோவொன்றை உணருகிறாய்... அது இப்பொழுது வித்தியாசமாய் உள்ளது, இல்லையா, சகோதரனே? ஆமென். ஆமென். அது சரியே. ஆமென். என்னுடைய சகோதரனே, உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது. சரி. வாருங்கள், சகோதரியே. அந்த ஆஸ்துமாவிலிருந்து நீ சுகமடைய விரும்புகிறாய். உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தி, 'இயேசுவே, நான் உம்மை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளுகிறேன்' என்று கூறு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்' என்று கூறப்பட்ட வார்த்தையின்படி உன்மேல் கரங்களை வைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், போய், சுகமடையுங்கள். 61அங்கே வெளியேயிருப்பவர்கள் சுகமடைய விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அந்தச் சிறிய சீமாட்டியை நான் காண்கிறேன்; இப்பொழுது அந்த நரம்புக் கோளாறைக் குறித்து வித்தியாசமாய் உணருகிறீர்கள், இல்லையா, சகோதரியே, அப்படியே சுகமடைந்து, நீங்கள் வித்தியாசமாக உணருகிறீர்கள், நிச்சயமாகவே, சத்தமின்றி அவ்வாறு உணருக்கிறீர்கள். இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்கியோடு இருங்கள். எனது கிறிஸ்தவ நண்பனே, சற்று முன்பு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உன்னால் மாத்திரம் அறிய முடிந்தால். நான் அங்கே வெளியே நோக்கி, இப்பொழுது வேறொரு ஜெப வரிசையை அழைக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அப்படியே ஒரு நிமிடத்தில் வேறொரு எண். சீமாட்டியே, நீ எதற்காக உனது கரத்தை மேலே உயர்த்தினாய்? நீ என்னை விசுவாசிக்கிறாயா? அங்கே சிவப்பு நிற தொப்பியை அணிந்துள்ள இந்த சீமாட்டி தான், நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே உங்களிடம் என்ன கோளாறு இருக்கிறது என்று தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம் என்னை நோக்கிப் பாருங்கள். ஆமாம், நீங்கள் ஒரு கட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிக்கிறீர்கள், இல்லையா? அது சரியல்லவா? அவர் பரிசோதி... நான் காண்கிறேன். அந்தக் கட்டியானது இடது காலில் உள்ளது, இல்லையா? அது சரி அல்லவா? அது சரி என்றால், உங்கள் கரத்தை இவ்விதமாக முன்னும் பின்னும் அசைத்துக் காட்டுங்கள். சகோதரியே, வீட்டிற்குச் சென்று, உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர் உங்களை சுகமாக்குகிறார். 62யார் சுகமடைய விரும்புகிறீர்கள்? யாருக்கு விசுவாசிக்க விருப்பம்? இப்பொழுது, இப்பொழுது நம்முடைய பரலோகப் பிதா என்னிடம் பேசுவாராக. சரியாக இங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன், சரியாக இந்த வழியில். அவர் ஒருவிதமாக கட்டுமஸ்தான சரீரத்தை உடைய ஒரு மனிதர். அவர் அவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்... ஓ, ஆமாம், அவர் ஒரு-ஒரு எலும்பு முறிவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். நான் அந்த மனிதனைக் காண முடிகிற இடத்தை நாம் பார்க்கலாம்; அப்போதே அவர் என்னுடைய தரிசனத்தை விட்டு வெளியே போய் விட்டார், ... சரியாக நின்று கொண்டிருக்கிறார். இதோ அந்த மனிதர் சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் ஒருவிதத்தில் அடர்த்தி குறைந்த தலைமுடிகளைக் கொண்ட ஒரு பெரிய மனிதர், அல்லது உமக்கு ஒரு எலும்பு முறிவோ, அல்லது குடலிறக்கமோ அல்லது ஏதோவொன்றோ ஏற்படவில்லையா? அது சரியே. என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு தாமே உன்னுடைய ஒவ்வொரு மிகச்சிறிய காரியத்தையும் சுகமாக்குவாராக. சற்று பொறுங்கள். இப்பொழுது எனக்கு முன்பாக ஒரு மனிதர் நின்று கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன், அவர் இந்த வழியாக வந்து கொண்டிருக்கிறார், அவர் ஒருவிதத்தில் ஒல்லியான மனிதர், அவர் சாம்பல் நிற சூட்டையும், ஊதா நிற கழுத்துப்பட்டையையும் அணிந்திருக்கிறார். அதோ அவர் சரியாக அங்கே அமர்ந்திருக்கிறார். ஐயா, சற்று ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். உம்-உம். ஊதா நிற கழுத்துப் பட்டையை அணிந்துள்ள, ஒருவிதத்தில் ஒல்லியாக தோற்றமளிக்கிற அந்த மனிதர் அதோ. ஓ, ஆமாம், நீர் வயிற்றுக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அது சரிதானே? உதாரணமாக, உம்முடைய சிறுநீர்ப்பையிலும் கூட ஏதோ கோளாறு உமக்கு உள்ளது, இல்லையா? அங்கு ஒரு சிறுநீர்ப்பை கோளாறு இல்லையா, புண்ணுள்ள சிறுநீர்ப்பை, அது சரிதானே? உம்முடைய கரத்தை மேலே உயர்த்தும். எனது சகோதரனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்முடைய சுகத்தை பெற்றுக் கொள்ளும். சற்று பொறுங்கள். 63இப்பொழுது, நண்பர்களே, பயபக்தியாயிருங்கள். நான் மிகவும் பலவீனமடைந்து வருகிறேன். சற்று பொறுங்கள், இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது, ஒரு மனிதர் இந்த வழியாக வந்து கொண்டிருக்கிறதைக் காண்கிறேன், இங்கே இதனூடாக கீழே இறங்கி வந்து கொண்டிருக்கிறார். சற்று பொறுங்கள். அந்த மனிதருக்கு அவருடைய...ல் ஏதோ கோளாறு உள்ளது. நான் காண்கிறேன், இல்லை, அது, அவர் பரிசோதிக்கப்படுகிறார், ஒரு மருத்துவர் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நிறுத்தி விட்டு, அவர் பின்னால் இந்த வழியாக வருகிறார்; அவர் போய்க் கொண்டிருக்கிறார், ஆமாம், அது—அது அவருடைய கல்லீரலாக இருக்கிறது. அவருக்குக் கல்லீரலில் கோளாறு உள்ளது. இப்பொழுது, நான் அந்த மனிதரைக் காண்கிறேன். இதோ அவர்... அதோ அந்த மனிதர் அமர்ந்திருக்கிறார், சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு கல்லீரலில் கோளாறு இல்லையா, ஐயா? வீங்கிப்போன கல்லீரல், அது சரி அல்லவா? எனது சகோதரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உம்முடைய காலூன்றி எழுந்து நின்று, உமது சுகத்தைப் பெற்றுக் கொள்ளும். இங்கே வேறு யாராவது சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறீர்களா, இயேசுவை தங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்கிறீர்களா? தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள்; விசுவாசியுங்கள். இப்பொழுது, நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? நான் உங்களிடம் சத்தியத்தையே கூறியிருக்கிறேனா? நான் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்று சர்வவல்லமையுள்ள தேவன் நிரூபிக்கும்படியாக இங்கே இருக்கிறாரா? அது அவ்வாறு இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசியுங்கள்: தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கியிருக்கிறார். அவர் உங்களைப் பற்றி இழுக்க வேண்டியதில்லை. இப்பொழுது, முழு காரியமும் அவ்வாறே அசைந்து கொண்டிருக்கிறது, என்னால் ஒருவரைக் காண முடியுமா முடியாதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்வீர்களா, செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்பது போன்றே செய்வீர்களா? இவ்விதமாக உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். தயவுசெய்து, உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். சகோதரன் ரிச்சியோ, சகோதரன் பாஸ்வர்த் அவர்களோ, யாராவது ஒருவர் சீக்கிரமாக இங்கே வாருங்கள். இங்கே வாருங்கள். சீக்கிரமாக எனக்குக் குடிக்க தண்ணீர் தாருங்கள். சரி, அங்கே. நான் வருந்துகிறேன், இது, ஏனென்றால் நான்-நான் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறேன், என்னால் இங்கே நிற்பதே கடினமாய் உள்ளது. சற்று பொறுங்கள். ஓ தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, இரக்கத்தை அருளுபவரே, இந்த ஜனங்கள் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பி, அவர்களை ஆசீர்வதியும் கர்த்தாவே. உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். கர்த்தருடைய நாமத்தில் இங்கேயிருக்கிற ஒவ்வொரு வியாதியையும் நான் சபிக்கிறேன்...?...